குடிநீர் வசதி

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சம்மாந்துறை ஹிஜ்றா புரத்திலுள்ள மக்களின் குடி நீர் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரிகளுடன் குறித்த கிராமத்திற்கு விஜயம் செய்து மக்களின் குறைபாடுகளை கேட்டறிந்து கொண்டார்.

அங்கு வாழும் மக்கள் குடி நீரை சம்மாந்துறையிலிருந்து கொண்டு வந்து குடிப்பதாக கூறியதுடன், குடிநீரை பெற்றுக்கொள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் நீர் குழாயினை வீதிகளுக்கு பொருத்தி நிரந்தரமாக குடி நீர் பிரச்சினையினை தீர்த்து மற்றும் வீதிகளுக்கு மின் விளக்குகளை பொருத்தி தருமாறும் தவிசாளரிடம் கேட்டுக்கொண்டனர்.

குடி நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை பிரதேச சபையினால் தற்காலிய குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், முடியுமானவரை குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அம்பாறை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதம பொறியிலாளர் எம்.ஐ. நஸீர், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் பீ.எம்.எம். மீராமுகைதீன் (றியால்) சம்மாந்துறை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் சம்மாந்துறை நிலையப் பொறுப்பதிகாரி வை.எல்.எம். பாஹிம், உதவி பொறியிலாளர் கே.எல்.எம். இப்றாகீம் உள்ளிட்டோர்களும் விஜயம் செய்தனர்.

தவிசாளர் மாஹிர் தாம் மேற்படி கிராமத்திற்கு மேற்கொண்ட கள விஜயம் தொடர்பாக நேற்று (09.03.2023) நடைபெற்ற சபை அமர்வில் உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தியதுடன் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செயவதற்கு சபை அனுமதியும் அளித்தது.

குடிநீர் வசதி

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)