
posted 8th March 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மருதமுனைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி எப்.எம். அமீறுல் அன்ஸார் மௌலானா அம்பாறை மாவட்டம்,கல்முனை பிரதேச காதி நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட் டுள்ளார். 2023-03-01ஆம் திகதி தொடக்கம் தொழில்படும் வண்ணம் இந்த நியமனம் வழங்கப்பட்டள்ளது. இலங்கை நீதிச்சேவை அணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஆனந்தி கனகரட்னம் இவருக்கான இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
இவர் மருதமுனையைச் சேர்ந்த மர்ஹும்களான பழீல் மௌலானா, ஆமீனா உம்மா தம்பதிக்கு மகனாக 1958-09-17ஆம் திகதி மருதமுனையில் பிறந்தார். மருதமுனை அல் - ஹம்றா வித்தியம், கல்முனை பாத்திமா கல்லூரி, சம்மாந்துறை மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளின் பழைய மாணவராவார். இவர் 1978-11-01ஆம் திகதி உதவி ஆசிரியராக நியமனம் பெற்று மருதமுனை அல் - மனார் மத்திய கல்லூரியில் கடமையாற்றினார்.
1981ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உள்வாரியாகக் கற்று பொதுக் கலைப் பட்டதாரியாக வெளியேறினார்.1984ஆம் ஆண்டு மீண்டும் பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்று மருதமுனை அல் - மனார் மத்திய கல்லூரியில் கடமையாற்றிய நிலையில் 1990ஆம் ஆண்டு இலங்கை அதிபர் சேவை தரம் ஒன்றில் சித்தி பெற்று கொழும்பு - 12 மிகுந்து மாவத்தை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பிரதி அதிபராகக் கடமையாற்றினார்.
இந்த நிலையில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமானி கற்கை நெறியைப் பயின்று அதில் சித்தியடைந்து இலங்கை சட்டக் கல்லூரிக்கு அனுமதி பெற்று 1998-12-01ஆம் திகதி சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். சட்டத்தரணியாக 25 வருட சேவையை நிறைவு செய்துள்ளார். இந் நிலையில் மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்து இந்த நியமனத்தைப் பெற்றுள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)