
posted 12th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு பயணிக்கவிருந்த ரயிலின் கழிவறையில் கைவிடப்பட்ட சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்புக்கு பயணிக்கவிருந்த ரயிலிலேயே இந்த சிசு கண்டுபிடிக்கப்பட்டது.
சிசு நீல நிற பிளாஸ்ரிக் கூடையில் கழிவறையில் வைக்கப்பட்டிருந்ததாக கொழும்பு கோட்டை புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கழிவறைக்கு சென்ற பயணி ஒருவர் இந்த சிசுவைப் பார்த்து கோட்டை ரயில் நிலைய அதிகாரிகளுக்குத் தெரிவித்தார். ஊழியர்கள் குழந்தையை மீட்டு கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
மீட்கப்பட்ட சிசுவுக்கு ஒன்றரை மாத வயது இருக்கலாம் என்று தெரிகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட சிசு கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
புகையிரத நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி. சி. ரி. வி. கமெராக்கள் மூலம் கழிவறையில் சிசுவை வைத்துவிட்டு சென்றவர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் கோட்டை பொலிஸ் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை பிந்திக் கிடைத்த தகவலின்படி சிசுவை விட்டுச் சென்ற சிசுவின் தாய் கைது செய்யப்பட்டதுடன் அவர் பொலிஸாரிடம் வாக்குமூலமும் அளித்துள்ளார்.
குழந்தையை எவராவது எடுத்துச் சென்று பத்திரமாக வளர்ப்பார்கள் என்று நினைத்து அப்படி விட்டுச் சென்றதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)