
posted 23rd March 2023
தூங்கிடும் நம் உறவுகளின் துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கல்வியுடன் சுயதொழிலார்வத்தையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்
இன்றைய காலக்கட்டத்தில் பொருளாதார சிக்கலுக்கு முகம் கொடுக்கும் நாம் எதிர்காலத்தில் நமது பிள்ளைகள் இவ்வாறான சிக்கலுக்குள் உள்ளாகாமலிருக்கக் கல்வியோடு சுய தொழில் மேதைகளாகவும் அவர்கள் உருவாக பெற்றோர்களாகிய எமக்கு பாரிய பொறுப்பு இருக்கின்றது என மன்னார் பிரதேச செயலாளர் எம் பிரதீப் தெரிவித்தார்.
புதன்கிழமை (22) நடைபெற்ற பேசாலை சென் மேரிஸ் வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட மன்னார் பிரதேச செயலாளர் எம் பிரதீப் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
மன்னார் மாவட்டத்தில் ஆரம்ப பாடசாலை பிரிவில் சென்.மேரிஸ் வித்தியாலயம் முதன்மையாக திகழ்ந்து வருகின்றது.
இங்கு மிகவும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ் விளையாட்டுப் போட்டியினை கண்டு கழிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்றைய பொருளாதாரக் கஷ்டத்திலும் மாணவர்களின் உடல், உளத்துக்கு இவ்வாறான விளையாட்டுக்கள் இன்றியமையானது என உணர்ந்து மிக சிறப்பாக இதை நடத்திக் கொண்டு இருக்கின்றீர்கள்.
ஒரு மாணவன் கல்வியில் எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைய நினைக்கின்றானோ அதற்கு இணையான ஆற்றலை விருத்தி செய்வதற்கு இவ்வாறான விளையாட்டுக்களும் அவசியமாகின்றது.
அதனால் மாணவனின்,
- உடல் ஆரோக்கியமாகின்றது
- அவனுடைய ஆளுமை விருத்தி அடைகின்றது
- அனுபவப் பாடத்தைக் கற்றுக் கொள்கின்றான்
- வெற்றி, தோல்வியினை சமப்படுத்தி தன்னை நிலைகொள்ள வைக்கின்றான்
இவை எல்லாம் சிறுவயதிலிருந்து நல் வாழ்க்கைக்கான ஒரு வழிகாட்டியாகவும் அமைக்கப்படுகின்றது.
எனவே, அவர்களைத் தட்டிக் கொடுத்து வாழ்க்கையில் முன்னேற வைப்பது ஒவ்வொரு பெற்றாரின் கடமையாகும்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)