
posted 27th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கடல் வளங்கள் எவருக்கும் வழங்கப்பட மாட்டாது
இலங்கையின் கடல் வளங்களையோ கடற்பரப்புக்களையோ அதில் சட்டத்துக்கு புறம்பாக முன்னெடுக்கப்படும் இழுவைமடி தொழிலுக்கோ, கடலட்டைப் பண்ணைகளுக்கோ இந்தியாவுக்கு மட்டுமல்ல எந்தவொரு நாட்டுக்கும் ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதை எமது கட்சியின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா முற்றாக விரும்பவில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் ஊடக பேச்சாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;
அண்மைக்காலமாக யாழ் மாவட்த்திலும் வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் கடற்றொழில் அமைச்சருக்கு எதிராக பல்வேறுபட்ட கருத்துக்களும் போராட்டங்களும் ஒரு சிலரால் அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்பட்டுவருதை அனைவரும் அறிவீர்கள்.
இவ்வாறான ஒரு சம்பவம் அண்மையில் மன்னார் மாவட்டத்திலும் இடம்பெற்றுள்ளது. இதில் கடலட்டை பண்ணைகள் அனுமதியின்றி மேற்கொள்ளப்படுவதாகவும் இதானால் கடற்றொழிலுக்கு பாதிப்புகள் உருவாகுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கடலட்டை பண்ணைகள் ஒவ்வொன்றும் நாரா மற்றும் நெக்டா நிறுவனங்களின் ஆய்வறிக்கையின் அடிப்படையில் குறித்தொதுக்கப்பட்ட ஏது நிலைகள் உள்ள இடங்களிலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் குறித்த தொழில் முயற்சியை முன்னெடுப்பவர்கள் பொருளாதார ரீதியில் வழர்ந்துவிடக் கூடாதென்றும் வடக்கின் அபிவிருத்தியில் கடற்றொழில் அமைச்சரின் வகிபாகம் இருந்துவிடக் கூடாதென்றும் எண்ணும் சுயலாபவாதிகள் சிலர் வெளிநாட்டு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப கருத்தக்களை முன்வைத்தவருகின்றனர்.
இது வடக்கின் கடற்றொழிலாளர்களுக்கு நன்கு தெரியும். இதேநேரம் தற்போது அதிகளவான கடற்பண்ணைகளை அமைப்பதற்கான அனுமதியை கடற்றொழிலாளர்கள் கோரிவருகின்ற நிலை உறுவாகியுள்ளது.
இதிலிருந்து போராட்டங்களை முன்னெடுக்கும் தரப்பினர் எதற்காக அதை மேற்கொள்கின்றனர் என்ற உண்மை புலனாகின்றது.
நாம் குறுகிய தரப்பினரது சுயலாப தேவைக்கான எதிர்ப்புகளுக்கோ ஆர்ப்பாட்டங்களுக்கோ அடிபணித்து கடற் பண்ணைகளுக்கான முறைப்படியான அனுமதி வழங்கலை நிறுத்திவிடப்போவதில்லை.
நாட்டின் அபிவிருத்தி மக்களின் அபிவிருத்தி போன்றவற்றை அடிப்படையாக கொண்டு பிரதேசங்களின் கடல் வளங்களின் பாதுகாப்பை மையப்படுத்தியே அவற்றை மேற்கொள்ள அனுமதிவழங்கப்பட்ட வருகின்றது.
எனவே குறித்த எதிர்க் கருத்துக்கள் ஒவ்வொன்றும் அவரவரது தனிப்பட்ட சுயநலன்களை மையப்படுத்தியதாகவே இருக்கும். அது தொடர்பில் அலட்டிக்கொள்ள போவதில்லை என்றும் தெரிவித்திருந்த ஶ்ரீரங்கேஸ்வர்ன் எல்லைதாண்டிய பிரச்சினை என்பது இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை என்பதால் அதை இராஜதந்திர ரீதியாகவும் சட்டரீதியாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் அதேநேரம் அதனால் பாதிப்புக்குள்ளாகும் உள்ளூர் மீனவர்களை போராட்டத்தில் ஈடுபடுமாறு ஊக்கப்படுத்துவதன் நோக்கம் எமது நாட்டின் கடற்படையினரை கடற்பரப்பில் நடந்துவரும் எல்லலைதாண்டிய சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தம் முயற்சியை மேலும் தூண்டும் வகையில் ஒரு உந்துதலை கொடுப்பதற்காகவே அமைகின்றது என்றும் தெரிவித்திருந்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)