
posted 14th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
ஐக்கிய காங்கிரஸ் கண்டனம்
மீள்குடியேற்றத்தை தடுக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் இனவாத கருத்துக்கெதிராக புத்தளம் ரத்மல்யாவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தை ஐக்கிய காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளதுடன், அமைச்சராக இருந்தும் வடமாகாண மக்களின் மீள் குடியேற்ற விடயத்தில் பொடுபோக்கு காட்டிய ரிஷாத் பதியுதீனையும் கண்டித்துள்ளது.
இது பற்றி ஐக்கிய காங்கிரஸ் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு 32 வருடங்கள் கடந்த பின்பும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் இன்னமும் சரியாக நடக்கவுமில்லை, காணி இல்லாத அம்மக்களுக்கு அரசகாணிகளை பகிர்ந்தளிக்கவுமில்லை.
அதே வேளை முஸ்லிம்களை மீள் குடியேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கெதிராக பா.உ. சிறிதரன் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இனவாத கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பாக விசேட ஜனாதிபதி ஆணைக்குழு உடனடியாக நியமிக்கப்பட்டு அநீதிக்குள்ளான அம்மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.
அதே வேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும், அ.இ. மக்கள் காங்கிரசும் கடந்த காலத்தில் வடமாகாண முஸ்லிம்களின் ஓட்டுக்களை பெற்று அமைச்சர்களாகவும், மாகாண சபை, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாக தமது சுக போக வாழ்க்கையை பலப்படுத்தினார்களே தவிர வட மாகாண முஸ்லிம்களுக்குரிய பிரச்சினைகளை சரியாக தீர்க்காததன் காரணமாகணத்தினால்தான் இன்று கண்டவனெல்லாம் அம்மக்களுக்கெதிராக இனவாதம் பேசுகிறான்.
ஆகவே, வடமாகாண முஸ்லிம்களின் கண்டன ஆர்ப்பாட்டத்தை நாம் வரவேற்பதுடன், ஆட்சி, அதிகாரம் இருந்தும் மீள் குடியேற்றத்தை சரியாக செய்யாத முன்னாள் அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம், அதாவுள்ளா ஆகியோர்களுக்கும் எதிராக இம்மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதே இத்தகைய ஏமாற்று கட்சிகளுக்கு பாடமாக அமையும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)