
posted 24th March 2023

அன்னாரின் இழப்பினால் கவலையில் ஆழ்ந்த அனைவருக்கும் தேனாரத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள்
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
ஏறாவூரிலிருந்து தலைமன்னார் வந்தவரின் உயிர் படுக்கையிலே பிரிந்தது
தலைமன்னார் பகுதிலுள்ள ஒரு கொண்டாத்துக்கு சமையல் செய்வதற்காக மட்டக்களப்பு பகுதியிலிருந்து வருகை தந்தவர் சமையல் முடிந்து உறக்கத்துக்குச் சென்றவரின் ஆவி படுக்கையிலேயே பிரிந்தது.
இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (24) காலை தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மரண விசாரணை யிலிருந்து தெரிய வருவதாவது;
கிழக்கு மாகாணம் ஏறாவூர் மீராக்கனி வீதிப் பகுதியிலிருந்து தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற கொண்டாட்டம் ஒன்றிற்கு சமையலுக்காக புதன்கிழமை (22) வந்திருந்த இஸ்மாயில் மொபிர்தீன் (வயது 43) கொண்டாட்டத்திற்கான சமையலை முடித்துவிட்டு வியாழக்கிழமை (23) இரவு கொண்டாட்ட வீட்டுக்கு அருகிலுள்ள வீடு ஒன்றில் படுக்கைக்குச் சென்றுள்ளார்.
பின் வெள்ளிக்கிழமை (24) காலை மட்டக்களப்புக்கு செல்வதற்காக இவருடன் வந்தவரில் ஒருவர் படுக்கையிலிருந்த மொபிர்தீனை எழுப்பியுள்ளார். மொபிர்தீனின் நிலையைக் கண்டு அவர் தலைமன்னார் பொலிசாருக்கு தெரியப்படுத்திய பின் இவரின் சடலத்தை தலைமன்னார் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்பு சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு அன்றே எடுத்துச் செல்லப்பட்டது.
மொபிர்தீனின் திடீர் மரணம் தொடர்பாக மன்னார் மரண விசாரணை அதிகாரி எஸ்.ஈ. குமணகுமார் மரண விசாரணையின் பின்பு உடற்கூற்று பரிசோதனை முடிந்த பின் இறந்தவரின் உடலை அன்னாரின் உறவினரிடம் கையளிக்குமாறு பொலிசாருக்கு கட்டளையைப் பிறப்பித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)