
posted 14th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் சிறையில்
பருத்தித்துறை நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் பன்னிரண்டு பேரையும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் பொன்னுத்துரை கிருஷாந்தன் திங்கட்கிழமை (13) உத்தரவிட்டார்.
எல்லை தாண்டி வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை (12) கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நீரியல் வளத்துறையினரினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கிருஷாந்தன் பொன்னுத்துரையின் வாசஸ்தலத்தில் நேற்று (13) முற்படுத்தப்பட்டு திங்கட்கிழமை (13)வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
திங்கட்கிழமை (13) மீண்டும் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கை விசாரித்த நீதவான் கிருஷாந்தன் பொன்னுத்துரை பன்னிரண்டு பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதே வேளை நேற்று முன்தினம் (12) எல்லை தாண்டி அனலைதீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு படகினையும், மீனவர்கள் நால்வரையும் கடற்படையினர் கைதுசெய்து, நீரியல்வளத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
குறித்த நால்வரையும் ஊற்காவற்றுறை நீதிமன்றில் நேற்று (13) மாலை முற்படுத்தப்பட்டனர். இம் மீனவர்கள் நால்வரையும் எதிர் வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஜே.கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய 16 இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)