posted 24th March 2023
அன்னாரின் இழப்பினால் கவலையில் ஆழ்ந்த அனைவருக்கும் தேனாரத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள்
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
உயிரிழந்தார்
மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்து கண்டி போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண், அபிவிருத்தி உத்தியோகத்தர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தில் பணியாற்றி வந்த அபிவிருத்தி உத்தியோகத்தரான மூன்று பிள்ளைகளின் தாயான திருமதி தர்ஷினி மணாளன் (வயது - 45) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
இவர், கடந்த 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்திருந்தார். மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி நேற்று (23) வியாழக்கிழமை காலை உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)