உடைந்து விழுந்தத காற்றாலை மின்சார கோபுரம்

மன்னார் மாவட்டத்தில் அவசர அவசரமாக அமைக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின்சார கோபுரம் ஒன்று கட்டுமானப் பணியின்போது உடைந்து விழுந்ததைத் தொடர்ந்து சில தினங்கள் இப் பணி இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் தீவில் மின் உற்பத்திக்கான காற்றாலை கோபுரங்கள் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து மன்னார், நானாட்டான் பிரதேச செயலகத்துக்கு உட்பட்டுள்ள நறுவலிக்குளம் கடற்கரையோரப் பகுதியில் மின் காற்றாலை கோபுரங்கள் அமைக்கும் பணி அண்மைக் காலமாக நடைபெற்று வருகின்றது.

இச் சமயத்தில் கட்டுமானப் பணியின்போது ஒரு கோபுரம் உடைந்து விழுந்துள்ளது. இதன்போது கனரகரக பளு தூக்கி (கிரேன் வாகனம்) ஒன்றும் சேதமாகியது.

இதன் காரணமாக இக் கோபுர கட்டுமானப்பணிகள் சில தினங்களாக இடை நிறுத்தப்பட்டிருந்ததாகவும், மீண்டும் இம் மாதம் தொடக்கம் வேலைகள் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் தெரியவருகின்றது.

நானாட்டான் பிரதேசத்தில் நறுவிலிக்குளம் முதல் அச்சங்குளம் வரை 6 மின் கோபுரங்களுக்கான பணிகள் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

உடைந்து விழுந்தத காற்றாலை மின்சார கோபுரம்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)