
posted 8th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் கண்புரை (கற்றாக்) சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுடைய நோயாளிகளுக்கு யாழ். போதனா மருத்துவமனையில் நன்கொடையாளர்களின் உதவியுடன் இலவச கண் சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
மேலும், இதற்கான நோயாளர்களை தெரிவுசெய்யும் கண்பரிசோதனை முகாம்கள் பின்தங்கிய பிரதேசங்களில் ஒழுங்குபடுத்தப்படவுள்ளன.
இதன்பிரகாரம் எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் இரண்டாவது கண்பரிசோதனை முகாம் வேலணை, மருதங்கேணி பிரதேச மருத்துவமனைகளில் நடைபெறவுள்ளன.
எனவே, கண்புரை சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ள நோயாளர்கள் மேற்படி கண் பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு தங்கள் பெயர்களைப் பதிவு செய்யுமாறும் அவர் அறிவித்துள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)