
posted 15th March 2023
துயர் பகிர்வோம்
துயர் பகிர்வோம்
இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் பாதைகள் ஏந்திப் போராட்டம்
யாழ்ப்பாணத்தில் இன்று (15) புதன் கிழமை அரசாங்கத்துக்கு எதிராக தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் ஆசிரியர் சங்கத்தினர் இன்றைய தினம் யாழ் பேருந்து நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- புதிய வரிக் கொள்கையை மீளப்பெறு
- வழங்கு வழங்கு 2/3 பங்கு சம்பள அதிகரிப்பை வழங்கு
- பாடசாலை மின் கட்டணங்களை பெற்றோர் மீது திணிக்காதே > மாணவர்களின் போசனை குறைபாட்டை நிவர்த்தி செய்
- பெற்றுக்கொண்ட வங்கி கடனுக்கான மேலதிக வட்டியை நீக்கு
- பதவி உயர்வு பிரச்சினைக்கு தீர்வை வழங்கு
உள்ளிட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டிலுள்ள 40க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)