
posted 8th March 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சால் முன்னெடுக்கப்பட்ட சிறந்த தொழில் முயற்சியாளரை பாராட்டிய நிகழ்வில் மன்னார் மாவட்டத்திலிருந்து திருமதி மஞ்சுளா சற்குணராஜா வெற்றிக் கேடயமும், பணப்பரிசும் மற்றும் சான்றிதழ் ஆகியனவும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு 2023.03.08ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 'அவள் தேசத்தின் பெருமைக்குரியவர்' எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹொட்டலில் புதன்கிழமை (08) நடைபெற்ற நிகழ்வில் மன்னார் மாவட்டத்திலிருந்து பேசாலையைச் சேர்ந்த திருமதி மஞ்சுளா சற்குணராஜா தேர்ந்தெடுக்கப்பட்டு இந் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்.
மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற சிறந்த தொழில் முயற்சியார்களை தெரிவு செய்யப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்திலேயே இவர் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு இந் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டவராவார்.
அதற்காக இவருக்கு வெற்றிகேடயம் , ஐம்பதாயிரம் ரூபா பணப்பரிசு மற்றும் சான்றிதழ் ஆகியன வழங்கப்பட்டன.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)