
posted 4th February 2023
மன்னார் லொத்தர் முகவர் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு கூடிய தொகை அதிர்ஷ்டம் கிடைக்கப் பெற்றுள்ளது. மன்னாரை நோக்கி லொத்தர் பிரியருக்கு தொடர்ந்து அதிர்ஷ்ட மழை பொழிகின்றது.
இவ்வாண்டு (2023) உதயமாகி 18.01.2023 அன்று மெகா பவர் சீட்டிலுப்பில் ஒருவருக்கு பத்து லட்சம் ரூபா அதிர்ஷ்டம் கிடைக்கப்பெற்று இருந்தது.
இப்பொழுது இதனைத் தொடர்ந்து 02.02.2023 அன்றைய சீட்டிலுப்பில் மன்னார் சின்னக்கடை வலம்புரி லொத்தர் விற்பனை நிலையமான என்.மகேந்திரனிடம் கொள்முதல் செய்யப்பட்ட கப்ருக சீட்டிலுப்பில் மேலும் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபா அதிர்ஷ்டம் கிடைக்க்பபெற்றுள்ளது.
இந்த வெற்றியாளருக்கான பணம் உடன் கையளிக்கப்பட்டுள்ளது..
26.12.2022 இல் நான்கு இலக்கங்கள் சரியாகி கப்ருக சீட்டிலுப்பில் ஒருவர் அதிர்ஷ்டத்துக்கு உள்ளாகி பத்து லட்சம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)