‘ஹக் சேர்' நினைவுமலர் புத்தக வெளியீட்டு விழா

முன்னைநாள் மன்னார் பிராந்திய கல்விப் பணிப்பாளர் ஜனாப் ஏ.சி. அப்துல் ஹக் அவர்களின் 10வது ஆண்டு நினைவுமலர் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை (11.03.2022) மாலை 4 மணியளவில் மன்னார் நகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

மன்னார் மடுமாதா சிறிய குருமடத்தின் அதிபர் அருட்பணி தமிழ்நேசன் அடிகளாரின் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் முதன்மை விருந்தினராக மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்கள் கலந்து கொண்டார்.

அத்துடன் இதில் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் செல்வி தேவராஜா தேவதயாழினி முன்னாள் மன்னார் அரசாங்க அதிபர் எஸ்.மரியதாசன் குரூஸ் முன்னாள் மன்னார் அரசாங்க அதிபர் வி. விஸ்வலிங்கம் இவர்களுடன் மேலும் கௌரவ விருந்தினர்களாக முன்னாள் மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளர்கள் எம். ஆபேல் றெவல் திருமதி எஸ். சுகந்தி செபஸ்ரியான் மற்றும் முன்னாள் மடு வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி எஸ். மாலினி வெனிற்றன் ஆகியோரும் இவ் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ் விழாவில் கலந்து கொண்ட மன்னார் மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபர்கள் வலயக் கல்விப்பணிப்பாளர்கள் அமரர் ஹக் சேர் அவர்களுடன் யுத்த சூழ்நிலை கடுமையாக இருந்த காலத்தில் பணியாற்றிய அந்தநாள் ஞாபகங்களையும் அவரின் மனிதநேய பணிகளையும் எடுத்தியம்பினர்.

'ஹக் சேர்' என்ற நூலை மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை ஹக் அவர்களின் மகனுக்கு முதல் புத்தகத்தை வழங்கி வெளியீட்டை ஆரம்பித்துவைத்தார்.

இந் நூலுக்கான நயப்புரையை இந்து நாகரிய ஆசிரிய ஆலோசகர் திரு.ச. ரமேஸ் வழங்கினார்.

மன்னார் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் திருமதி வி. மேரி சியாளினி மற்றும் செல்வி அருள்மொழி குரூஸ் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் இறை வணக்க நிகழ்வையும் மேற்கொண்டதுடன், மன்னார் பரதக் கலாலயா நாட்டியப் பள்ளி மாணவிகளால் நடனங்களும் இடம்பெற்றதுடன் இந் நிகழ்வை ஓய்வுநிலை கிராம அலுவலர்களின் பொறுப்பாளராக திகழ்ந்த ராதா பெனாண்டோ தொகுத்து வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

அமரர் மன்னார் பிராந்திய கல்விப் பணிப்பாளர் ஜனாப் ஏ.சி.அப்துல் ஹக் காலத்தில் அவருடன் பணியாற்றியவர்கள் பலர் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கல்வியாளர் ஹக் அவர்களின் ஞாபகர்த்தமாக புத்தகம் வெளியீடு செய்யப்பட்டது மாத்திரமல்ல இவ் நிகழ்வில் கலந்துகொண்ட யாவருக்கும் அவரின் ஞாபகர்த்தமாக அவரின் குடும்பத்தினர் சுவர் கடிகாரங்களை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

‘ஹக் சேர்' நினைவுமலர் புத்தக வெளியீட்டு விழா

தலைமன்னார் விஷேட நிருபர் வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House