
posted 9th March 2022
இலங்கை நாடு சுதந்திரம் பெற்று 75 வது வருடம் பூர்த்தியாகும் நிலையில் 2023 பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதிக்கு முன்னராக 75 லட்சம் மரங்களை நடவேண்டும் என அரசின் தீர்மானத்துக்கு அமைய மன்னார் மாவட்டத்தில் முதலாவது நிகழ்வு மன்னார் அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் பங்களிப்புடன் ஆரம்பமாகியுள்ளது.
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் ‘சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக இலங்கையை பசுமையாக்கி மக்களை வாழவைத்தல் எனும் திட்டத்தின் அடிப்படையில் மர நடுகை நிகழ்வு புதன்கிழமை (09.03.2022) அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையில் துப்பாசி ஆழம் குளம் கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் இலங்கை நாடு சுதந்திரம் பெற்று 75 வது வருடம் பூர்த்தியாகும் நிலையில், 2023 பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதிக்கு முன்னராக 75 லட்சம் மரங்களை நடவேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் முதலாவது நிகழ்வாக இந் நிகழ்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் மாவட்ட நீர்பாசன பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர், பொலிஸ் பொறுப்பதிகாரி, நீர்ப்பாசன பொறியலாளர்கள், வனத்துறை அதிகாரி, விவசாய அமைப்பின் தலைவர், மாவட்ட விவசாய அமைப்புகளின் சம்மேளன தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட சுற்றாடல் மேம்பாட்டு அதிகாரி, தொழில்நுற்ப உத்தியோகத்தர்கள் ஏனைய அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House