
posted 1st March 2022
மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கத்தோலிக்க பங்கு தந்தை ஒருவரும் அவரின் சாரதியும் உயிரிழந்தனர்.
திருகோணமலை - அன்புவழிபுரம் சகாய மாதா ஆலய பங்குத் தந்தையான கணேசபிள்ளை நிதிதாசன் (வயது 49) என்பவரும், அவரின் கார் சாரதியுமே இவ்வாறு மரணமாகினர்.
ஹொரவப்பொத்தானை - திருகோணமலை வீதியில் மரதன்கடவை என்ற இடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இந்த விபத்து இடம்பெற்றது.
உயிரிழந்த பங்குத் தந்தை முன்னர் கிழக்கு மாகாணத்தின் மனிதாபிமான பொருளாதார அபிவிருத்தி (எஹெட்) நிறுவனத்தின் திருகோணமலைப் பணிப்பாளராகவும் சேவையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தின் சாரதியை ஹொரவப்பொத்தானை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House