
posted 3rd March 2022
இம்முறை இடம்பெறும் ஜெனிவா மனித உரிமைகள் சபை அமர்விலாவது எமக்கான நீதி கிடைப்பதற்கு வழி பிறக்கவேண்டும் என்று வவுனியாமாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினர் சங்கம் தெரிவித்துள்ளது.
வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தால் இன்று வியாழக்கிழமை வவுனியா பழைய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் பின்னர் கருத்து தெரிவித்தபோதே அவர்கள் இவ்வாறு கூறினர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்;
எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டு பத்துவருடங்கள் கடக்கின்ற நிலையில் எமக்கான நீதி தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகின்றது. தொலைத்த எமது பிள்ளைகளை காணாமல் சாட்சிகளான பல தாய்மார்கள் மரணித்துவிட்டனர். வயது முதிர்ந்த நிலையில் அடுத்த போராட்டத்துக்கு வருவோமா என்ற நம்பிக்கை அற்ற நிலையில் இந்தப் போராடங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
இலங்கையில் இனப்படுகொலை தொடர்ச்சியாக இடம்பெறாமல் தடுக்கப்பட வேண்டுமானால் ராஜபக்ஷ குடும்பமும், இனப்படுகொலைகளுக்கு பொறுப்பாக இருந்த படைத் தளபதிகளும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்படவேண்டும்.
யுத்த காலத்தில் மரணித்த இராணுவ உடல்களை பொறுப்பெடுக்க மறுத்த சிங்கள அரசு அவர்களை காணாமல் ஆக்கப்பட்டோர் என தெரிவித்து அவர்களின் குடும்பங்களை ஏமாற்றுகின்றது.
எனவே சர்வதேச சமூகம் எமக்கான நீதியை விரைவில் வழங்கவேண்டும். இம்முறை இடம்பெற்றுவரும் ஜெனிவா மனித உரிமைகள் சபை அமர்விலாவது உறுதியான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு எமக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும். அதற்கு உறுப்புநாடுகள் அனைத்தும் ஒத்துழைக்கவேண்டும்.
எமக்கான நீதி கிடைக்கும் வரையில் நாம் எமது போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்துவருவோம் என்றார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House