
posted 12th March 2022
வருடாந்த இடமாற்றம் ஏப்ரல் 4ஆம் திகதி
இலங்கையில் மாவட்ட நீதிபதிகள், நீதிவான்களுக்கு நீதிச் சேவை ஆணைக்குழுவால் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. நீதிச்சேவை அலுவலர்களுக்கான வருடாந்திர இடமாற்றத்தின் கீழ் இந்த மாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த இடமாற்றங்கள் எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளன.
இவர்களில் வடக்கு – கிழக்கில் தமிழ்பேசும் நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ. ஜி. அலெக்ஸ்ராஜா, பருத்தித்துறை மாவட்ட நீதிபதியாக மாற்றப்படுகிறார். பருத்தித்துறை மாவட்ட நீதிபதி திருமதி காயத்திரி சைலவன், மல்லாகம் நீதிமன்ற நீதிவானாக மாற்றப்படுகிறார். மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ. ஏ. ஆனந்தராஜா, யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவானாக மாற்றப்படுகிறார்.
யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ. பீற்றர் போல் மட்டக்களப்பு நீதிவானாக மாற்றப்படுகிறார். மன்னார் மாவட்ட நீதிபதி பெ. சிவகுமார், மல்லாகம் மாவட்ட நீதிபதியாக மாற்றப்படுகிறார். நீதிச்சேவை பயிற்சி அலுவலகர் ஹிபத்துல்லா சமட் மன்னார் மாவட்ட நீதிபதியாக முதல் நியமனத்தைப் பெறவுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி ரி. கருணாகரன் வாழைச்சேனை மாவட்ட நீதிபதியாக மாற்றப்படுகிறார். வாழைச்சேனை மாவட்ட நீதிபதி எச்.எம்.எம். பாஷில், மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியாக மாற்றப்படுகிறார். மட்டக்களப்பு மேலதி நீதிவான் ஜீவராணி கருப்பையா பண்டாரவளை நீதிவானாக மாற்றப்படுகிறார்.
நீதிச்சேவை பயிற்சி அலுவலகர் ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார், களுவாஞ்சிகுடி நீதிவானாக முதல் நியமனம் பெறுகிறார். மட்டக்களப்பு நீதிவான் ஏ.சி. ரிஷ்வான், பொத்துவில் மாவட்ட நீதிபதியாக மாற்றப்படுகிறார். நீதிச் சேவை பயிற்சி அலுவலகர் பி.ஆர்.ஐ. ஜமில், கிளிநொச்சி மேலதிக மாவட்ட நீதிபதியாக முதல் நியமனம் பெறுகிறார்.
கைது செய்யப்பட்ட 8 இந்திய கடற்தொழிலாளர்களையும் விளக்கமறியலில்
கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 இந்திய கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரணைதீவு கடற்பரப்பில் கடந்த 27ஆம் திகதி எல்லை தாண்டிய நிலையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 8 இந்திய மீனவர்களை கைது செய்த
கடற்படையினர், கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அதன்பின் குறித்த 8 இந்திய கடற்தொழிலாளர்களும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் பாலசுப்ரமணியம் முன்னிலையில் முற்படுத்தப்பட்டதையடுத்து குறித்த 8 பேரையும் நேற்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த இந்திய மீனவர்களை மன்றில் முன்னிலைப்படுத்துமாறும் அன்றையதினம் குறித்த வழக்குகளுக்கு குற்றச்சாட்டுப் பத்திரங்களைத் தாக்கல் செய்யுமாறும் கட்டளை இடப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House