வயோதிபத் தம்பதியினரிடம் கைவரிசையைக் காட்டிய கள்ளர்கள்

வயோதிபத் தம்பதியினரிடம் கைவரிசையைக் காட்டிய கள்ளர்கள்

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் தனித்து வாழ்ந்துவந்த வயோதிபத் தம்பதியரை தாக்கி காயப்படுத்திய திருடர்கள் குழு ஒன்று அவர்களிடம் இருந்து பெருமளவு நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளது.

வீட்டுக்கு நெருக்கமாக கடை ஒன்றை நடத்திவரும் வயோதிபத் தம்பதியர் அந்த வீட்டில் தனித்து வாழ்ந்து வருகின்றனர்.

நேற்று புதன்கிழமை அதிகாலை மூவர் குறித்த வீட்டுக்குள் நுழைந்து வயோதிபரைத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். அதன் பின்னர் அவரது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை முயற்சியிலும் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் அவர் அணிந்திருந்த நகைகள் உள்ளடங்கலாக வீட்டிலிருந்த 32 பவுண் நகைளையும், வீட்டிலும் கடையிலும் வைக்கப்பட்டிருந்த 7 இலட்சம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

படுகாயமடைந்த முதியவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கட்டுத்துவக்கிற்குப் பலியான குடும்பஸ்தர்

முல்லைத்தீவு நட்டாங்கண்டல் பிரதேசத்துக்கு உட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் காட்டுக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கட்டுத்துவக்கு வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

நட்டாங்கண்டல் உழவனேரி பகுதியைச் சேர்ந்த 38 வயதுள்ள தர்மலிங்கம் இளங்கோ என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கட்டுத்துவக்கு வெடித்ததில் படுகாயமடைந்த இவர் மீட்கப்பட்டு மல்லாவி ஆதார மருத்துவமனை கொண்டு செல்லும்போது உயிரிழந்துள்ளார்.

சடலம் மல்லாவி ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து நெட்டாங்கண்டல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பெருமளவு கஞ்சாவுடன் 55வயது நபர் கைது

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேற்கு வீதி, ஊர்க்காவற்துறையைச் சேர்ந்த நபர் ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார்.

ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து நேற்று புதன்கிழமை இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

55 வயதான குறித்த சந்தேக நபர் 2000 மில்லிக்கிராம் கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தவேளை கைது செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேகநபரை ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வயோதிபத் தம்பதியினரிடம் கைவரிசையைக் காட்டிய கள்ளர்கள்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House