யாழ்ப்பாணத்தில் கண்டனப் பேரணி

யாழ்ப்பாணத்தில் கண்டனப் பேரணி

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் கண்டனப் பேரணியொன்றை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்புக்களின் தலைமையில் இன்று சனிக்கிழமை நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடக்கு-கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் செயலாளர் அ. லீலாவதி எதிர்வரும் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் ஆரம்பிக்கும் கண்டனப் பேரணி முற்றவெளியில் நிறைவடையும்.

இந்த பேரணியில் கட்சி மற்றும் அரசியல் ரீதியான வேறுபாடுகளை கடந்து இந்த போராட்டத்தை எதிர்கொள்ள தீர்மானித்துள்ளோம் என்றார்.

அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது அதனை எதிர்த்து வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன்போது இந்த தாக்குதல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


நாசா விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானி வைத்திலிங்கம் துரைசாமி காலமானார்

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் நீண்ட காலம் கடமையாற்றிய யாழ்ப்பாணம் - குப்பிழான் கிராமத்தைச் சேர்ந்த தமிழ் விஞ்ஞானி கலாநிதி வைத்திலிங்கம் துரைசாமி கடந்த 17ஆம் திகதி தனது 90 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.

1968 ஆம் ஆண்டு நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் அப்பலோ-11ஐ அனுப்பும் குழுவில் இவர் அங்கம் வகித்தவர்.

வைத்திலிங்கம் துரைசாமி பிறந்து வளர்ந்த வீடு தற்போது குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமமாக விளங்குகின்றது.


பெற்றார் ஒருவருடன் வந்த குழு ஆசிரியரைத் தாக்கின

வவுனியா, செட்டிக்குளம், பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்குள் நுழைந்து, ஆசிரியர் ஒருவர் மீது மூன்று நபர்கள் இணைந்து தாக்குதல் மேற்கொண்டதில் படுகாயமடைந்த ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை பாடசாலை ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருந்த போது காலை 8.40 மணியளவில் பாடசாலைக்குள் சென்ற குறித்த பாடசாலை மாணவன் ஒருவரின் தந்தை உள்ளிட்ட மூவர், பாடசாலை வளாகத்தில் நின்ற ஆங்கில பாட ஆசிரியரான எஸ். சாந்தகுமார் (வயது-45) என்பவர் மீது கட்டையால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

மற்றைய ஆசிரியர்கள் இதனை அவதானித்ததும் அங்கிருந்து தப்பித்துச்சென்றுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் தலையில் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் சக ஆசிரியர்களின் உதவியுடன் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டீசல் கிடைக்குமுன்பே விபத்தில் தழுவிய உழவு இயந்திரம்

டீசல் பெற்றுக்கொள்ள வந்த உழவு இயந்திரம் வாய்க்காலில் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை 9.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி - கரடிபோக்கு சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு அதிகளவான உழவு இயந்திரங்கள் வருகை தந்திருந்தன.

இந்த நிலையில், குறித்த உழவு இயந்திரம் கட்டுப்பாட்டிலிருந்து விலகி அருகில் உள்ள நீர்பாசன வாய்க்காலில் விழுந்துள்ளது. குறித்த உழவு இயந்திரத்தை மீட்பதற்கு விவசாயிகள் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விவசாயிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.



எரிவாயுக்கு எதிர்பார்த்து மயக்கமடைந்த பெண்

சண்டிலிப்பாய் பிரதேச செயலக வளாகத்தில் எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருந்த பெண் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார் என்று தெரியவருகிறது.

தடுப்பூசிகள் மூன்றையும் பெற்றுக்கொண்டவர்களுக்கே சமையல் எரிவாயு வழங்கப்பட்டிருக்கின்றது. எரிவாயுவைப் பெறுவதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் பல மணி நேரம் காத்திருந்திருக்கின்றனர்.

இதன்போதே, பெண் ஒருவர் மயங்கி வீழ்ந்த நிலையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டிருக்கின்றது.

சைக்கிள் திருடன் கைது

யாழ்நகர் பகுதியில் சைக்கிள் திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞன் ஒருவரே நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக சந்தேக்கத்துக்கு இடமான முறையில் சைக்கிள் ஒன்றை குறித்த இளைஞன் எடுத்து சென்றபோது, அப்பகுதியில் கடமையில் இருந்த யாழ்.பொலிஸார் இளைஞனை மறித்து விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது சைக்கிளை இளைஞன் திருடிச் செல்வதை அறிந்து அவரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

இதேவேளை, யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்வையிட சைக்கிளில் வருவோர், வைத்தியசாலைச் சூழலில் தமது சைக்கிள்களை நிறுத்தி விட்டு செல்லும்போது அவை களவாடப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

அது தொடர்பில் பல முறைப்பாடுகள் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் பொலிஸார் வைத்தியசாலை சூழலில் தமது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் கண்டனப் பேரணி

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House