யாழ்ப்பாணத்தில் 50 பாடசாலை மாணவர்களுக்கு  பிரதமர் பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார்

யாழ்ப்பாணம் ஸ்ரீ நாகவிகாரை சர்வதேச பௌத்த மத்தி நிலையத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய மீகஹஜதுரே சிறிவிமல நாயக்க தேரரைச் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சனிக்கிழமை (19) சந்தித்து நலம் விசாரித்தார்.

வணக்கத்திற்குரிய மீகஹஜதுரே சிறிவிமல நாயக்க தேரருடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்ட பிரதமர், அவரிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னர், யாழ்ப்பாணம் ஸ்ரீ நாகவிகாரை சர்வதேச பௌத்த நிலையத்தில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதன்போது பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 50 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை கௌரவ பிரதமர் வழங்கினார்.

இலங்கை இராணுவத்தின் ஒருங்கிணைப்புடன், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு அதற்கு அனுசரணை வழங்கியது.

குறித்த சந்தர்ப்பத்தில் கௌரவ இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா, 51 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க உள்ளிட்ட இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகள் பலரும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் 50 பாடசாலை மாணவர்களுக்கு  பிரதமர் பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார்

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House