மூன்று வருடங்களுக்குள் மறைந்த மூத்த கலைஞர்களுக்கு அஞ்சலி

மன்னார் மாவட்டத்தில் கடந்த மூன்று வருடங்களுக்குள் மறைந்த மூத்த கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வைபவம் மன்னார் மாவட்ட செலகத்தில் மன்னார் மாவட்ட கலை பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இவ் அஞ்சலி வைபவமானது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் மன்னார் மாவட்ட கலை பண்பாட்டு பேரவையின் தலைவியுமான திருமதி அ. ஸ்ரான்லி டிமெல் தலைமையில் புதன்கிழமை (16.03.2022) பிற்பகல் இடம்பெற்றபோது மன்னார் மாவட்டத்தின் கலைஞர்கள் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வின்போது நான்கு பிரதேச செயலகங்களான மடு பிரதேச செயலகப் பிரிவில் அமரர்களான செல்லன் மாதவன், அம்பலவாணர் செல்லத்துரை, யக்கோபு சேரம் ஆகிய மூவருக்கும்;

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமரர்களான சந்தான் ஞானசீலன், கிறிஸ்தோகு சந்தியோகு ஆகிய இருவருக்கும்;

நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் அமரர்களான செ. செபமாலை (குழந்தை), தேவதாசன் அல்மேய்டா, செபஸ்ரியன் ஜேசுதாசன், றொசாயல் யூலியஸ் றெவல் ஆகிய நான்கு பேருக்கும்;

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் அமரர்களான கபிரியேல் இம்மானுவல், மர்ஹீம் மக்கள் காதர், அந்தோனி மார்க் ஆகிய மூவருக்கும்;
மொத்தம் 12 மறைந்த மூத்த கலைஞர்களின் ஆகியோரின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு இவற்றுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபங்கள் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டன.

மூன்று வருடங்களுக்குள் மறைந்த மூத்த கலைஞர்களுக்கு அஞ்சலி

வாஸ் கூஞ்ஞ

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House