
posted 19th March 2022

ஏ.யஸ்ரின் சொய்சா
இந்திய அரசாங்கமானது எமக்கு உலர் உணவு பொட்டலங்களை வழங்குவதற்குப் பதிலாக மீன்பிடி வலைகள் வழங்கினால் அவை எமது மீனவ சமூகத்துக்கு பெரும் பயன்பாடாக இருக்கும் என மன்னார் மாவட்ட கடற்தொழில் சம்மேளன தலைவர் ஏ.யஸ்ரின் சொய்சா தெரிவித்தார்.
மன்னாரில் பாதிப்டைந்துள்ள மீனவர்களுக்கு இந்திய அரசால் உலர் உணவு பொதிகள் மன்னார் மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டபோது கடற்தொழில் அமைச்சர் இந்திய துணை தூதுவர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோர் கலந்துகொண்ட இவ் நிகழ்வில் மன்னார் மாவட்ட கடற்தொழில் சம்மேளன தலைவர் ஏ. யஸ்ரின் சொய்சா மன்னார் மீனவர்கள் சார்பாக இங்கு உரையாற்றும்போது மேலும் தெரிவிக்கையில்;
எமது மீனவர்களுக்கு இந்த நேரத்தில் ஒரு சிறு உதவியை செய்ய முன் வந்திருக்கும் இந்திய அரசுக்கும் இந்திய துணை தூதரக அதிகாரிக்கும் நான் எங்கள் மீனவர்கள் சார்பாக நன்றியை நவிழந்து நிற்கின்றேன்.
இந்திய இலுவைப்படகு மீனவர்களால் எமது மீனவர்கள் மிகவும் சொல்லொன்னா துன்பங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஒவ்வொரு மீனவர்களும் குறைந்தது ஐந்து லட்சத்துக்கு மேற்பட்ட விதத்தில் இவர்களால் மீன்பிடி உபகரணங்களை இழக்கும் நிலையே காணப்படுகின்றது.
ஆகவே 16.03.2022 அன்று எமது மீனவர்களுக்கு உதவி செய்யும் நோக்குடன் மன்னாருக்கு வருகை தந்திருக்கும் எமது அண்டைநாடான இந்தியாவின் இலைங்கைக்கான துணை உயர் ஸ்தானிகர் மன்னாருக்கு வந்திருக்கும் இந்தவேளையில், எமது மீனவர்களின் பிரச்சனை தொடர்பாக அறிந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி எமது மீனவர்கள் சார்பாக இங்கு வேண்டி நிற்கின்றேன்.
இந்திய இலுவைப் படகுகளால் எமது மீனவர்கள் பெரும் மீன்பிடி உபகரணங்களை இழந்த நிலையில் இருப்பதால், இந்த உலர் உணவுப் பொருட்களுக்குப் பதிலாக மீன்பிடி வலைகளை வழங்கும்பட்சத்தில் அது எமது மீனவர்களுக்கு பெரும் நன்மை பயக்கும் என்பது எமது வேண்டுகோளாக இருக்கின்றது.
மன்னார் தீவில் காற்றாலை பொருத்தப்பட்டுள்ளதால் எமது மீனவர்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். ஆகவே எமது கடற்தொழில் அமைச்சரும் இந்திய துணை தூதரக அதிகாரிகளும் இது தொடர்பாக ஆய்வு செய்து எமது மீனவர்கள் பாதிப்படையாத வகையில் இதுவிடயத்தில் கையாள வேண்டும் என வேண்டி நிற்கின்றேன்.
ஏற்கனவே மன்னாரில் காற்றாலை திட்டத்தை முன்னெடுத்தபோது எமது மாவட்டத்திலுள்ளவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் தருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் நாம் ஏமாற்றப்பட்டவர்களாகவே இருந்த வருகின்றோம்.
மன்னாருக்கு எப்பொழுதும் திட்டங்களைக் கொண்டு வரும்போது மன்னார் மக்களுக்கு முன்னுரிமை என தெரிவிக்கின்றனர். ஆனால் இதில் எவ்வளவு உண்மைத்தன்மை இருக்கின்றது என்பது எமக்கு புரியவில்லை.
ஆகவே எமது அரசாங்க அதிபர் மற்றும் கடற்தொழில் அமைச்சர் இவர்கள் எமது மக்களின் அன்றாட பிரச்சனைகள் என்ன என்பது நன்கு அறிந்திருப்பவர்கள் ஆகவே மன்னாருக்கு கொண்டுவரப்படும் எந்த திட்டமாக இருந்தாலும் அவைகளை நன்கு பரிசீலனை செய்து நடைமுறைப்படுத்துவது சாலச் சிறந்தது என நாம் கேட்டு நிற்கின்றோம் என இவ்வாறு தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House