
posted 15th March 2022
பொருட்களுக்கான விலை ஏற்றத்தால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு அரசு மானிய (நிவாரண) திட்டத்தை அறிவிக்க வேண்டும். இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், பத்மநாபா மன்றம்- ஈ.பி.ஆர்.எல்.எப், இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மக்களின் வாழ்வாதாரம், கடன்சுமை காரணமாக ஒரு நேர உணவின்றி திண்டாடுகின்ற நிலைமை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, மாதாந்த வருமானம் பெறுகின்ற அரச,தனியார் துறைகளில் வேலை செய்கின்றவர்கள் தொடக்கம் தினக்கூலி வேலை செய்கின்றவர்கள் வரையும் மீனவர்கள், விவசாயிகள், தினக்கூலி புரிகின்றவர்கள் அனைவரும் மிகவும் பொருளாதாரச் சுமையினால் பாதிப்படைந்து வறுமையில் வாடுகின்ற நிலையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.
இந்த நிலைமையினை புரிந்து கொண்டு பாதிக்கப்படுகின்ற மக்களின் வறுமையினை (அத்தியாவசிய தேவைகளை) வாழ்வாதாரத்தைப் போக்குவதற்கு அரசு மானிய நிவாரண திட்டத்தை அறிவிக்க வேண்டும், அமுல்படுத்த வேண்டும்.
குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் நகரப்பகுதி தொடக்கம் அடிமட்டக் கிராமங்கள் வரையும் உள்ள (எழுவாங்கரை, படுவாங்கரை) போன்ற பிரதேசங்களில் உள்ள பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் எரிவாயு பாவிப்பவர்கள் தொடக்கம் விறகு பாவிப்பவர்கள் வரையும் உள்ள பல நூற்றுக்கணக்கான குடும்பங்களில் மூன்று வேளை உணவு உண்ணாமல் ஒரு நேரம் தான் உணவு உண்ணக்கூடிய சூழ்நிலை உருவாயிருக்கின்றன. அத்தியாவசியத் தேவைகளுக்கு கூட வசதி இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
மானிய நிவாரணத் திட்டம் அறிவிக்கப்படாத பட்சத்தில் குறிப்பிட்ட மக்கள் வறுமையில் வாடுவதோடு,ஒருநேர உணவிற்கு
வழியில்லாமல் வாடக்கூடிய சூழ்நிலை உருவாகும். என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House