மறையாசிரியர்களுக்கான ஒருநாள் தவக்காலத் தியானம்

கத்தோலிக்க திருச்சபையானது தற்பொழுது தவக்காலத்தை நினைவுகூர்ந்து வரும் இவ்வேளையில் மன்னார் மறைமாவட்டத்தில் பரவலாக ஒவ்வொரு பங்குகளிலும் பலதரப்பட்டவர்களுக்கான தவக்கால தியானங்கள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் மன்னார் மறைமாவட்டத்தில் மன்னார் மறைகோட்டத்தில் உள்ள மறைவாழ்வுக்கல்விப் பணியாளர்களுக்கான ஒருநாள் தியானம் மறைக்கல்வி நடுநிலையத்தின் ஒழுங்கமைப்பில் மன்னார் மறைமாவட்டத்தின் தோட்டவெளி வேதசாட்சிகளின் இராக்கினி அன்னையின் ஆலய யாத்திரிகர் ஸ்தலத்தில் இடம்பெற்றது.

ஞாயிற்றுக்கிழமை (20.03.2022) நடைபெற்ற இத் தியானத்தின் வளவாளராக கொழும்பு டிவைன் தியான இல்லத்தின் பணிப்பாளர் சகோதரர் நிக்லஸ் கிசோக் அவர்கள் கலந்து கொண்டு இத் தியானத்தை முன்னெடுத்துச் சென்றதுடன் இத் தியானவேளையில் திருப்பலியையும், நற்கருணை ஆசீரையும் இவ் ஆலய பரிபாலகர் அருட்பணி டெரன்ஸ் அடிகளார் வழங்கினார்.

இத் தியானத்தில் தலைமன்னார், கீழியன்குடியிருப்பு, பேசாலை, சிறுத்தோப்பு, தோட்டவெளி, எழுத்தூர், மன்னார், பள்ளிமுனை மற்றும் வங்காலை பங்குகளைச் சார்ந்த மறைக்கல்வி ஆசிரியர்கள் 186 பேர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மறையாசிரியர்களுக்கான ஒருநாள் தவக்காலத் தியானம்

வாஸ் கூஞ்ஞ

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House