மன்னார் பாடல் தளமான தீருக்கேதீஸ்வரத்தில் பெருந்தொகையானோர் பாலாவியில் தீர்த்தமாடி தீர்த்த காவடி எடுத்ததனர்.

இலங்கையில் என்றும் இல்லாதவாறு சிவராத்திரி தினத்தன்று பாலாவியில் தீர்த்தமாடி பக்தர்கள் தீர்த்த காவடி எடுத்து தமது கையாலேயே மகாலிங்க பெருமாளுக்கு அபிஷேகம் செய்த நிகழ்வு வழமைபோன்று மன்னார் பாடல் தலமான திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்றது. இலங்கையின் நாலா பக்கங்களிலிருந்தும் அதிகமான பக்தர்கள் மன்னார் திருக்கேதீஸ்வரத்துக்கு வருகை தந்திருந்தனர்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு மன்னார் பாடல் தளமான திருக்கேதீஸ்வர ஆலயத்துக்கு இலங்கையின் நாலா பக்கங்களிலிருந்தும் பெருந் தொகையான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

திருக்கேதீஸ்வர ஆலய புனரமைப்பு பணிகள் இடம்பெறுவதனால் 2015 இல் பாலஸ்தாபனம் செய்து சுவாமிகள் அனைவரையும் பாலாபத்தில் எழுந்தருளப்பண்ணி வழமையான ஆறுகால பூஜைகளும் முறைப்படி மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு இடம்பெற்றது.

இவ்வாண்டு யூலை மாதம் 6 ந் திகதி இவ் ஆலயத்தின் கும்பாபிஷேகம் பெருவிழாவுக்கான ஆயத்தங்கள் இடம்பெற இருக்கின்றபோதும் இம்முறை கடந்த காலங்களைப்போல் சிவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது.

வெளி மாவட்டங்களிலிருந்து சிவராத்திரி தினத்துக்கு இரு தினங்களுக்கு முன்பே பக்தர்கள் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்துக்கு வருகை தந்திருந்தமை காணக்கூடியதாக இருந்தது.

கொவிட் தொற்று காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களே வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்தபோதும், பெரும் திரலான பக்தர்கள் வருகை தந்து பாலாவியில் தீர்த்தமாடி பக்தர்கள் தீர்த்த காவடி எடுத்து தமது கையாலேயே மகாலிங்கப்பெருமாளுக்கு அபிஷேகம் செய்து விட்டு திரும்பிய பக்தர்களும் அதிகமாக காணப்பட்டனர்.

கொவிட் காரணமாக வழமையான வசந்த மண்டப நிகழ்வுகள் பெரும் பாலானவை நடைபெறாதபோதும் ஒரு சில வசந்த மண்டப நிகழ்வுகளும் இடம்பெற்றது.

ஏற்கனவே திட்டமிட்டபடி சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்ததும் நோக்கக்கூடியதாக இருந்தது.

அன்னதானம் மற்றும் தாகச்சாந்தி யாவும் இடம்பெற்றபோதும் சுகாதார நடைமுறைகளுக்கு எற்றவாறு இடம்பெற்றது. ஏன்பதும் குறிப்பிடத்தக்கது.

மன்னார் பாடல் தளமான தீருக்கேதீஸ்வரத்தில் பெருந்தொகையானோர் பாலாவியில் தீர்த்தமாடி தீர்த்த காவடி எடுத்ததனர்.

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House