
posted 16th March 2022
மன்னாரில் தற்பொழுது பேசும்பொருளாக இருந்துவரும் சட்டவிரோத மண் அகழ்வு, காற்றாலை, போதை வஸ்துப் பாவனையுடன் மன்னார் தீவுக்கு எதிர்காலத்தில் பெரும் அச்சுறுத்தல் காணப்படுவதால் அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டிய கட்டாயம் உள்ளது என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு பிடேலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தனது திருமடல் ஊடாக அழைப்பு விடுத்துள்ளார்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு பிடேலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க மக்களுக்கு தவக்காலத்தில் வருடந்தோறும் எழுதும் திருமடலில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
மன்னார் மாவட்டத்தில் இன்று பேசுபொருளாக சட்டவிரோத மண் அகழ்வு, காற்றாலை, போதைவஸ்துப் பாவனை போன்ற விடயங்கள் உருப்பெற்றுள்ளன.
கனியவள மண் அகழ்வினால் மன்னார் தீவுக்கு எதிர்காலத்தில் பாரிய அச்சுறுத்தல் ஏற்படவுள்ளதாக சூழவியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே எமது எதிர்காலச் சந்ததினரின் நன்மை கருதி இந்தத் தீமைகளுக்கு எதிராகப் போராட நாம் அனைவரும் ஒன்றித்து முன்வரவேண்டும் என ஆயர் தனது தவக்கால் திருமடலில் இவ்விடயத்தையும் விஷேடமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House