மன்னாருக்கு டீசல் வராவிடில் தனியார் போக்குவரத்து சேவைகள் பாதிப்படையும் அபாயம் -  ரி. ரமேஷ்

இன்றைய நிலையில் நாட்டில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார கஷ்டத்திலும் மன்னார் மாவட்ட பிரயாணிகளின் நலன்கருதி மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்து சேவைகளை இயன்றளவு சரியான முறையில் மேற்கொண்டு வருவதுடன் மன்னாரில் டீசல் தட்டுப்பாட்டால் தொடர்ந்து சேவைகள் பாதிப்படையுமோ என்ற ஐயப்பாடு எழுந்துள்ளதாக மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்து சேவை சங்கத் தலைவர் ரி. ரமேஸ் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்து சேவை சங்கத் தலைவர் ரி. ரமேஸிடம் மன்னார் மாவட்டத்தில் தனியார் போக்குவரத்து சேவைகள் தொடர்பாக விசாரித்தபோது அவர் மேலும் தெரிவிக்கையில்;

நாட்டில் தற்பொழுது டீசல் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றபோதும் மன்னார் மாவட்டத்தில் இயங்கி வரும் 86 தனியார் போக்குவரத்து சேவைகளும் மன்னார் மாவட்ட பிரயாணிகளின் நலன்கருதி இயன்றளவு சேவைகளை முன்னெடுத்து வருகின்றன.

ஆனால் தற்பொழுது மன்னாருக்கு டீசல் வராமையால் புதன்கிழமை (16.03.2022) முதல் டீசல் மன்னாருக்கு வரும்வரை தனியார் போக்குவரத்து சேவைகள் பாதிப்படையும் அபாயம் தோன்றியுள்ளது.

இருந்தபோதும் எமது தனியார் போக்குவரத்து சேவை சங்க உறுப்பினர்கள் யாவரும் மன்னார் மாவட்ட பிரயாணிகளின் நலன்நோக்கி ஒற்றுமையுடன் இயன்றளவு தங்கள் சேவைகளை சகல கிராம மற்றும் வெளி மாவட்டங்களுக்கான சேவைகள முன்னெடுத்து வருவதாகவும் மன்னார் தனியார் போக்குவரத்து சேவைகள் சங்கத் தலைவர் ரி. ரமேஷ் தெரிவித்தார்.

மன்னாருக்கு டீசல் வராவிடில் தனியார் போக்குவரத்து சேவைகள் பாதிப்படையும் அபாயம் -  ரி. ரமேஷ்

வாஸ் கூஞ்ஞ

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House