பொருளாதாரப் பின்னடைவால் தாக்கப்பட்ட அபிவிருத்திகள்

பிரதேச சபை வருமானத்தில் 2022ம் ஆண்டு செய்யப்பட வேண்டிய அபிவிருத்தி பணிகள் பாதியளவிலேயே மேற்கொள்ளப்படும் அபாய நிலையுடன், திண்ண, திரவக்கழிவகற்றலிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை அவரது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி மற்றம் அரசியல் நெருக்கடிகள் மத்தியில் எமது மண்ணில் வாழ்கின்ற மக்கள் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றார்கள். எரிபொருள் உள்ளட்ட பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கின்ற மக்கள் எண்ணிக்கை இன்று அதிகரித்து வருகின்றது.

இந்த நெருக்கடியான நிலை இலங்கையில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களையும் வெகுவாக பாதித்திருக்கின்றது. உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் முற்று முழுதாக முடங்கக்கூடிய நிலை இன்று உருவாகியிருப்பதை இன்று உணரக்கூடியதாக இருக்கின்றது.

விசேடமாக கூறப்போனால், 2022ம் ஆண்டுக்கான பாதீட்டை கடந்த டிசம்பர் மாதம் நிறைவு செய்திருந்தோம். எங்களுடைய பாதீடு முன்னேற்றகரமான பாதீடாக சபையில் சமர்ப்பிக்கப்பட்டு 160 மில்லியன் ரூபாய்களை மூலதன வேலைத்திட்டங்களிற்காக ஒதுக்கீடு செய்து சுமார் 78 வேலைத்திட்டங்களை இந்த ஆண்டு மேற்கொள்வதற்கு நாங்கள் திட்டமிட்டிருந்தோம்.

ஆனால் இன்று இருக்கின்ற விலை மதிப்பீடுகளின்படி குறித்த தொகையை பெறமுடியுமா என்ற நிலை இருக்கையில், பெற்றுக்கொள்ளப்பட்ட வருமானத்திற்கு ஏற்ப செய்யப்படுகின்ற மதிப்பீடுகளை வைத்துக்கொண்டு வேலைத்திட்டங்களை நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.

தற்பொழுது இருக்கின்ற நிலவரத்தில் பெற்றுக்கொள்ளப்படக்கூடிய தொகையில் 78 வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு பதிலாக 40 வேலைத்திட்டங்கள் வரை மாத்திரமே மேற்கொள்ளக்கூடியதாக நிலை இருக்கின்றது. இது பாரதூரமான பிரச்சினையாக சபைகளிற்கு முன்னாலே இருக்கின்ற விடயமாக உள்ளது.

இதேவேளை திண்மக்கழிவகற்றல் மற்றம் திரவக்கழிவகற்றல் என்பன எமது பிரதான சேவைகளில் ஒன்றாக இருக்கின்றது. அத்தியாவசிய பணிகளாக இருக்கின்ற இந்த பணிகளை நிறைவேற்றுவதற்கு எங்களுடைய வாகனங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

எங்களிற்கான தேவைகளிற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் நிரப்பு நிலையங்களினால் வழங்கப்படுவதன் காரணத்தினாலே அத்தியாவசிய சேவைகளில் உள்ள திண்மக்களழிவகற்றல் மற்றும் திரவக்கழிவகற்றல் சேவைகளில் தாமதங்கள் ஏற்படக்கூடியதான நிலை ஏற்பட்டள்ளது.

இதைவிட நிதி அமைச்சரின் சுற்றறிக்கைக்கு அமைவாக வீதி மின்விழக்குகளை அணைத்தல் மற்றும் புதிய விளக்குகளை பொருத்துவதை தவிர்த்தல் உள்ளிட்ட விடயங்களும் மக்களிற்கான சேவைகளை மேற்கொள்வதில் சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ளது.

இவ்வாறான நிலை கரைச்சி பிரதேச சபைக்கு மாத்திரமல்ல, அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிற்கும் ஏற்பட்டிருக்கம் என நம்புகின்றேன் என அவர் தெரிவித்தார்.

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் மக்கள் நிவாரணங்களை எதிர்பார்க்கின்றனர். கரைச்சி பிரதேச சபையினால் மக்களிற்கான வரிசார்ந்த நிவாரணங்கள் ஏதும் வழங்கப்படவுள்ளதா என அவரிடம் வினவியபோது,

கடந்த காலங்களில் இருந்த ஆதன வரி அறவீட்டினை 10 வீதத்திலிருந்து குறைத்துள்ளோம். தற்பொழுது மீண்டும் நெருக்கடியான நிலை மக்களிற்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வருமான வரி செலுத்த தவறுபவர்களிற்கு அறவிடப்பட்டும் தண்டப்பணத்தினை நீக்குவது தொடர்பில் வரும் நாட்களில் சபை நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்தார்.

பொருளாதாரப் பின்னடைவால் தாக்கப்பட்ட அபிவிருத்திகள்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House