
posted 23rd March 2022
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் வாசிப்புத் திறனை விருத்தி செய்யும் நோக்குடனும், உலகப் பெரியார்கள், அறிஞர்கள் பற்றிய அறிவூட்டலை வழங்கும் வண்ணமும், பல்கலைக்கழக நூலகத்தில் “புத்தகக் கண்காட்சி” எனும் செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர், கலாநிதி ரமீஸ் அபூபக்கரின் ஆலோசனையுடன், முன்மாதிரியான குறித்த “புத்தகக் கண்காட்சி” செயற்திட்டத்தை பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாயுதீன் தலைமை தாங்கி வெற்றிகரமாக செய்படுத்திவருகின்றார்.
இதன்படி, குறித்த புத்தகக் கண்காட்சி திட்டத்தின் நான்காவது தொடராக, மன்னராட்சி மகுடத்தை தன் திறமையால் மாற்றியமைத்த 17 ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த கவிஞர் ஜோன் மில்டனின் படைப்புக்கள் பல்கலைக்கழக நூலகத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன், நூலகர் எம்.எம். றிபாயுதீன் தலைமையில், அவரது நூல்கள், படைப்புக்கள் பற்றிய அறிமுக நிகழ்வும் நடைபெற்றது.
தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் பிரதான நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
17ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் ஜோன் மில்டன் இங்கிலாந்தின் இலக்கிய அரங்கில் மாபெரும் புரட்சியாளர். அவர் ஒரு ஆக்கபூர்வமான தத்துவஞானி, ஒரு எழுச்சியூட்டும் சிந்தனையாளர் வரலாற்று ஆசிரியர், பத்திரிகையாளர், எழுத்தாளர், விவாதவாதி மற்றும் மன்னராட்சிக்கு எதிராகவும் ஜனநாயகத்துக்கு ஆதரவாகவும் வாழ்ந்த சிறந்த நாவலாசிரியரும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார்.
இந்நிகழ்வில் ஜோன் மில்டனின் ஆக்கங்கள், அவர் படைப்புகள், கவிதைகள், உரைநடை இலக்கியங்கள், அவரது நூல்கள் மற்றும் அவர் தொடர்பான இதர ஆக்கங்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டன.
அத்துடன் ஜோன் மில்டன் பற்றியதான ஓர் விரிவுரை தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரதான நூலகத்தில் நூலக பயிலுனராக பயிற்சி பெரும் மொழித்துறையில் சிறப்பு மும்மொழிக் கற்கையை கற்றுக்கொண்டிருக்கும் மாணவி H. அகீலா வினால் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலை கலாசார பீடத்தின் சிரேஷ்ட ஆங்கில மொழி விரிவுரையாளர் மற்றும் அத் துறைத் தலைவர் A.M.M நவாஸ் கலந்து கொண்டார். அவர் தனது உரையில் 'ஜோன் மில்டன்' பற்றிய அறிமுகம் அவரின் படைப்புகளில் முக்கியத்துவம், அவரின் படைப்புகளில் தேவைகள், இலக்கியங்களின் முக்கியத்துவம், இலக்கியத்தை மாணவர்கள் கற்க வேண்டும் என்றும் மாணவர்களின் தொழிற்பயிற்சிக்கு இவ்வாறான நிகழ்வுகள் முக்கியம் எனவும் கருத்துரைத்தார்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House