
posted 20th March 2022
யுத்தம் காரணமாக மூடப்பட்ட இலங்கை சிமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.
1950 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை 1990 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக மூடப்பட்டது.
இத்தொழிற்சாலை 728 ஏக்கர் பரப்பளவைக் கொண்டிருந்தாலும், தற்போது அதன் பெரும்பாலான பகுதிகள் குடியிருப்பு பகுதிகளாக மாறியுள்ளன.
2021 பெப்ரவரி 08 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய, எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையின் பயன்படுத்தக்கூடிய கட்டடங்களை தவிர ஏனைய கட்டிடங்களை இடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
எனினும் 80 வீதமான கட்டடங்களை புனரமைத்து பயன்படுத்த முடியும் என பிரதமரின் இந்த கண்காணிப்பு விஜயத்தின்போது தெரியவந்துள்ளது.
அதற்கமைய காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையை புனரமைக்க அரசாங்கம் முன்வந்துள்ளது.
பிரதமரின் இந்த கண்காணிப்பு விஜயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் இலங்கை சிமெந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் காமினி ஏகநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House