பிரதமரின் தலைமையில் இடம்பெற்ற இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவையின் 23வது ஆண்டு நிறைவு விழா

இளம் இலங்கை தொழில்முனைவோர் பேரவையின் 23வது ஆண்டு நிறைவு விழா கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் வியாழக்கிழமை (10) பிற்பகல் கொழும்பு ஷங்க்ரிலா ஹோட்டலில் இடம்பெற்றது.

500க்கும் மேற்பட்ட இலங்கை வணிகங்களை உள்ளடக்கிய இளம் இலங்கை தொழில்முனைவோர் பேரவை உள்ளூர் தொழில்முனைவோரை முதன்மையாக கொண்ட பேரவையாகும்.

இப்பேரவையின் ஆரம்பக் கூட்டத்தில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கலந்துகொண்டிருந்தமை விசேடம்சமாகும்.

அதன் பின்னர் பிரதமர் அவர்கள் பல தடவைகள் பேரவையின் ஆண்டு நிறைவு விழாக்களில் கலந்துகொண்டுள்ளார்.

இளம் இலங்கை தொழில்முனைவோர் பேரவையின் 23வது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 2022/2023 ஆண்டிற்கான புதிய தலைவராக திமுத் சங்கம சில்வா அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.

குறித்த சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன, கௌரவ இராஜாங்க அமைச்சர்களான விதுர விக்ரமநாயக்க, தயாசிறி ஜயசேகர மற்றும் தூதுவர்கள், தூதுவப் பிரதிநிதிகள், முன்னாள் அமைச்சர்கள், இளம் இலங்கை தொழில்முனைவோர் பேரவையின் முன்னாள் தலைவர் சாரங்க குணவர்தன உள்ளிட்ட இளம் தொழில்முனைவோர் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதமரின் தலைமையில் இடம்பெற்ற இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவையின் 23வது ஆண்டு நிறைவு விழா

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House