பணத்தை கொடுத்து திசை திருப்ப நினைக்கிறது இலங்கை அரசு - செல்வம் அடைக்கலநாதன்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களுடைய உறவினர்களுக்காக பல வருடங்களாக போராட்டங்களை நடத்திவருகின்ற இவ்வேளையில் ஒரு லட்சம் ரூபா பணத்தால் இவர்களை சமாளிக்கலாம் என்ற எண்ணத்தை விடுத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என பாதிப்புற்றுள்ளவர்களுக்கு அரசு வெளிப்படுத்த வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கை அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியதை தொடர்ந்தே செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

அடைக்கலநாதன் தொடர்ந்து ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்;

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தங்களுடைய பிள்ளைகளை உறவினர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்று கூற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்ததே பல வருட காலங்களாக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கை அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது.

பல வருடங்களாக தங்களுடைய பிள்ளைகளுக்காகவும், கணவன்மாருக்காகவும் போராடி வரும் தாய்மார்களுக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் பணத்தை கொடுத்து அவர்களுடைய போராட்டத்தை திசைதிருப்ப வேண்டாம் என்று நான் அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றேன்

முடிந்தால் காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்ற உண்மையை கண்டுபிடித்து அந்த தாய்மார்களின் உறவினர்களின் ஏக்கங்களை தீர்த்து வையுங்கள்.

ஒரு உயிரின் பெறுமதி ஒரு லட்சமா? மனிதாபிமானமற்ற நடவடிக்கையில் இலங்கை அரசு செயல்படுவதை ஏற்க முடியாது.

இதே நிலைமை சிங்கள மக்களுக்கு நடந்து இருந்தால், அவர்களிடம் இந்த பதிலை உங்களால் கூற முடியுமா? இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மேலும் இன்று இந்த நாடு இவ்வாறு ஒரு வங்குரோத்து நிலையில் உணவு, எரிபொருள் உட்பட பல பொருட்களுக்கு தட்டுப்பாடு, அத்தனை பொருட்களுக்கும் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது

இந்த அரசாங்கம் ஒரு கையாலாகாத நிர்வாக திறமையற்ற ஒரு அரசாங்கமாக இருப்பதே காரணமாக இருக்கின்றது.

யுத்த காலத்தில் கூட மக்கள் இவ்வாறான ஒரு பெருங் கொடுமையை அனுபவித்ததில்லை.

பொருட்கள் விலையேற்றம், பொருட்களுக்கான தட்டுப்பாடு போன்றவை தமிழ் மக்களுக்கு புதியவை அல்ல. ஆனால் அதை இன்று சிங்கள மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கு வாக்களித்து தனிப்பெரும்பான்மை ஆக ஆட்சி பீடம் ஏற்றிய சிங்கள மக்கள் இதனை தற்பொழுது உணர்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்றார்.

பணத்தை கொடுத்து திசை திருப்ப நினைக்கிறது இலங்கை அரசு - செல்வம் அடைக்கலநாதன்

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House