படையெடுக்கும் வியாபாரிகள்

கிழக்கிலங்கையின் பல்வேறு பிரதேசங்களுக்கும் வெளிமாகாண அங்காடி வியாபாரிகள் பெருமவில் படையெடுதவண்ணமுள்ளனர்.

தமிழ் - சிங்கள் சித்திரைப் புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில், பண்டிகைக்கால வியாபார நோக்குடன் இந்த அங்காடி வியாபாரிகளின் வருகை தற்சமயம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக உடுதுணிகள் ரெடிமேட் ஆடைகள், புடவைகள் வியாபாரம் செய்யும் வியாபாரிகளே கூடுதலாக வருகை தருவதுடன், அண்மைக்காலமாக பாதரட்சைகள், மட்பாண்டப் பொருட்களுட்பட ஏனைய அலங்காரப் பொருட்களை விற்பனை செய்வோரும் காணப்படுகின்றனர்.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் பிரதான வீதிகளின் மருங்குகளில் குறித்த வியாபாரிகள் தமது பொருட்களைக் காட்சிப்படுத்தி வியாபார நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், உள்ளுர்களில் முக்கிய இடங்களிலும் இந்த அங்காடி வியாபாரிகள் காணப்படுகின்றனர்.

தற்போதைய நிலையில் இரவு பத்து மணிக்கு மேலும் இவர்களது வியாபாரம் தொடர்வதுடன், பெரும்பாலும் உடுதுணிகள், ஜவுளி வியாபாரம் எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டையொட்டி களைகட்டியும் வருகின்றது.

படையெடுக்கும் வியாபாரிகள்

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House