
posted 1st March 2022

எமது மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் மத்தியில் தொழிற் சந்தைக்குரிய கல்வித் தகைமை இல்லாமையே வேலைவாய்ப்பு வழங்குவதில் பாரிய சவாலை ஏற்படுத்துகிறது என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
கல்வி ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தை நாம் அனைவரும் செய்ய வேண்டியது, எமது தலையாய கடமை, கல்வி எமது மக்களுக்கு கடந்த காலத்தில் பெருமையை தேடிக்கொடுத்த ஒன்று. ஆனால் அந்த நிலைமை மாறி அவ்வாறு பெருமைப்படும் வகையில் எமது கல்வி அடைவு மட்டம் இல்லை என்பது வருத்தமளிக்கின்றது.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஏற்பட்ட கல்வி சரிவு நிலைமையை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இன்று யுத்தம் முடிந்து 12வருடங்கள் கடந்து விட்டன. தற்போதும் எமது கல்வி அடைவு மட்டம் இருந்த இடத்தை விட பின்னோக்கி நகர்வதனைப் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.
அவ்வாறு பார்த்துக்கொண்டிருந்தால் அடுத்த தலைமுறை நிச்சயமாக எங்களைக் குறைகூறும்.
கடந்த பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் எங்கள் மாவட்டத்திலுள்ள தீவகவலயமே நாட்டின் கடைசி வலயமாக இருந்தது.
எமக்கு பின்னால் இருந்த அம்பாந்தோட்டை, மாத்தறை மாவட்டங்கள் தற்போது கல்வியில் முன்னணி வகிக்கின்றன.
நாங்கள் உருவாக்கும் பட்டதாரிகள் மற்றும் மாணவர்கள் கல்விச் சந்தைக்கு பொருத்தமானவர்களா? என்றால் உண்மையிலேயே அது சந்தேகத்திற்குரிய விடயம். இதனால் வேலைவாய்ப்பு வழங்குவது மிகப்பெரிய சவாலாக காணப்படுகிறது. தற்போது தொழிற்சந்தையில் தேவைப்படும் கல்வித் தகைமைகள் எம் மாணவர்களிடம் இல்லை. அந்த தகுதிகளை ஏற்படுத்திக்கொடுத்து வாழ்வாதார ரீதியாக அவர்களை உயர்த்துவதென்பது மிகப்பெரிய சவாலான விடயம்.
மாணவர்கள் மத்தியில் கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பாடங்களில் ஈடுபாடு மிகக் குறைவாக உள்ளது. உயர்தரத்தில் தேர்ச்சி பெற்று வருடாந்தம் சுமார் 45,000 மாணவர்கள் நாடளாவிய ரீதியாக பல்கலைக்கழகம் செல்கின்றனர்.
அவர்களில் மாவட்ட கோட்டா முறையில் 25,000 பேரும், மெரிட் கோட்டா முறையில் 18,000 மாணவர்களும் உள்ளீர்க்கப்படுகின்றனர்.
கோட்டா முறைமை வேண்டாம் என்ற நாம் இப்போது அதனை வேண்டும் எனக் கோரியும் மெரிட் கோட்டா முறை மூலம் பல்கலைக்கழகம் செல்வோர் தொகை எமது மாகாணத்தில் மிகக் குறைவு. 2000 மாணவர்கள் செல்ல வேண்டிய இடத்தில் 150 - 200 மாணவர்களே எமது மாகாணத்தில் மெரிட் கோட்டா முறையில் பல்கலைக்கழகம் செல்கின்றனர்.
தற்போது தனியார் கல்வி நிலையங்கள் பல சேவை மனப்பான்மையை விட்டு வியாபார நோக்கில் செயற்பட்டு வருகின்றனர். ஒரு வகுப்பில் 1000 மாணவர்களை வைத்து கற்பிக்கும் நிலை காணப்படுகிறது.
அந்த மாணவர்களில் அதிக திறமை உள்ளவர்கள், மேலும் அக்கறை காட்ட வேண்டியவர்கள் எனப் பலர் இருப்பர். அதிக திறன் கொண்டவர்களை மேலும் ஊக்குவித்து மெரிட் கோட்டா முறையில் பல்கலைக்கு அனுப்பினால் எமக்கு கிடைக்கும் மாவட்ட கோட்டா எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். எனவே இவ்விடயத்தில் தனியார் கல்வி நிலையங்களும் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் வியாபார நோக்கை விட்டு சேவை மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House