துறைநீலாவணையில்  சுமந்திரன்

வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி. வனவள பாதுகாப்பு. மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் எமது மக்களின் நிலங்களை சூறையாடும் நாடகங்கள் அரங்கேறி வருவதையும். பௌத்த சின்னங்களை அமைத்து எமது கலை கலாசார விழுமியங்களை அழிப்பதிலும் தற்போதைய அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருவதைக் காணலாம். இதனை தடுத்து நிறுத்துமாறு நாம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டம் நடாத்தி எமது எதிர்ப்பை வெளிக்காட்டி இவ் விடயங்களை உலகறிய வைத்துள்ளோம்.

இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ .சுமந்திரன் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோட்டையாக விளங்கும் துறைநீலாவணையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை 27.02. 2022 இரவு இடம்பெற்ற மக்கள் சந்திப்பு பிரதேச சபை உறுப்பினர் க. சரவணமுத்து தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன், இரா. சாணாக்கியன். த. கலையரசன் ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் சா. இராசேந்திரன் ஆகியோர் உரையாற்றினர்.

பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் அங்கு மேலும் பேசுகையில்;

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் உதிரத்தில் ஊறிய அரசியல் பேரியக்கமாகும். துறைநீலாவணை மக்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சின் தீவிர பற்றாளர்கள் மட்டுமல்ல தமிழ் மக்களின் எல்லைக் கிராமங்களைப் பாதுகாக்கும் பெருமைக்குரியவர்கள் என்பது வரலாற்றுப் பதிவாகும்.

தமிழ் மக்களின் நிலங்கள் கிழக்கில் மட்டுமன்றி முல்லைத்தீவு, வவுனியா போன்ற மாவட்டங்களிலும் கபளீகரம் செய்யப்பட்டுவருகின்றன. இவற்றுக்கு எதிராக நாம் குரல் கொடுத்து அதனை தடுத்து நிறுத்த களத்தில் நின்று போராடி வருகின்றோம்.

ஒரே நாட்டுக்குள் எமது மக்கள் தமக்குரிய சுயநிர்ணய உரிமையினைப் பெற்று கௌரவமான முறையில் வாழ வேண்டும். இதுவே எமது கோரிக்கையாகும். இலங்கை சுதந்திரமடைந்த 1948ஆம் ஆண்டிலிருந்து எமது மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான சூழலில் நாம் சலுகைகளுக்காகவும். அமைச்சுப் பதவிகளுக்காகவும் ஆசைப்பட்டு எமது இனத்திற்கு துரோகம் செய்யவில்லை. மாறாக, மக்களோடு மக்களாக நின்று பயணிக்கின்றோம்.

வேலைவாய்பை தருகின்றோம். அபிவிருத்திகளைச் செய்வோம் என்றெல்லாம் கூறியவர்கள் ஓடி ஒழிந்துவிட்டார்கள் என்று இங்கு கூறப்பட்டது. எமது மக்களுக்கான உரிமைகள் கிட்டும் பட்சத்தில் எம்மை நாமே ஆளும் நிலை உருவாகும். என்றார்.

துறைநீலாவணையில்  சுமந்திரன்

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House