துணைபோகக் கூடாது - துரைரெத்தினம்

ஒரு நாட்டிற்குள் தீர்வுத்திட்டத்தை விரும்புகின்றவர்கள் ஜனாதிபதியை சந்திப்பது எவ்வித தவறுமில்லை. ஆனால் தமிழர்களை ஏமாற்றக் கூடியவாறு ஜனாதிபதியின் அணுகுமுறை இருந்ததே வரலாறாகும் என்பதை உணர வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், பத்மநாபா மன்றம் - ஈ.பி.ஆர்.எல்.எப். இரா. துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது;

இந்நாட்டைப் பொறுத்தவரையில் தமிழ்பேசும் மக்களின் உரிமைகள் தொடர்பாக இலங்கையை மாறிமாறி ஆட்சி புரிகின்ற அரசாங்கங்கள் இனவாதம் பூசி ஏமாற்றி வருகின்றதே வரலாறாகும். இதனால் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாது தமிழர்கள் சர்வதேசத்தை நாடி முறையிட்டதும், தேசிய நலன்கருதி நடக்காமல் இருப்பதும், தேசியக் கொடிகளை ஏற்றாமல் இருப்பதும், தமிழீழ கோரிக்கையை முன் வைப்பதும், சுயாட்சி அதிகாரம் கேட்பதும், அரசாங்கத்திற்கு சார்பாக நடக்காமல் இருப்பதும், தொடர்ச்சியாக தமிழர்கள் அரசுக்கு எதிராக வாக்களிப்பதும், மாறிமாறி ஆட்சி புரிகின்ற அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.

இதிலிருந்து தமிழர்களை அரசாங்கம் மீட்க வேண்டுமாயின், அரசாங்கத்தின் தமிழர்கள் தொடர்பான நல்லெண்ண செயற்பாடு தமிழர்களுக்கு நம்பிக்கையை ஊட்ட வேண்டும். இத் தருணத்தில் தமிழர்களை உரிமைகள் தொடர்பாக மாண்புமிகு ஜனாதிபதி பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளாரா? அல்லது நடைமுறைப் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு நல்லெண்ண சமீஞ்சையாக காட்டுவதற்கு அழைத்துள்ளாரா?

தமிழர்கள் பலமாக இருந்த சூழ்நிலையில் எதையும் செய்யாத அரசு சர்வதேசத்தை ஏமாற்றி, தமிழர்களையும் பிரித்தாண்டு பலவீனப்படுத்தி உள்ளது. இச் சூழ்நிலையில் ஒன்றுமே இல்லாமல் போவதைவிட உள்ளதை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைத்து தமிழ்த் தலைமைகளுக்கும் உண்டு.

ஒவ்வொரு தலைமையும் தாங்கள் நினைத்தனவற்றை மட்டும் நடைமுறைக்கு வரவேண்டுமெனக் கூறுவது இன்றைய காலச் சூழ்நிலையில் பொருத்தமான விடயங்கள் அல்ல. கையில் உள்ளவற்றை குறிப்பாக உள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

நல்லாட்சிக் காலத்தில் புதிய தீர்வுத் திட்டத்தை காட்டி காலத்தை வீணடித்து ஏமாற்றியதே இனவாத அரசின் வரலாறு. இனி புதிய அரசு ஏமாற்ற முயல்வது அவர்களின் முயற்சி ஊடாக தெரிய வருகின்றது.

எனவே உள்ளதையும் இல்லாமலாக்குவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு தமிழ்த்தலைமைகள் துணை போகக் கூடாது. இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி சந்திப்பதற்கான அழைப்பை உரிமைகள் தொடர்பாக இருந்தால், பாரதப்பிரதமரின் வருகையையும், சர்வதேசத்தின் அழுத்தத்தையும் பரிசீலனைக்கு தமிழ்த் தலைமைகள் உட்படுத்த வேண்டும்.

ஒருசிலர் இம் மாவட்டத்தில் 13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாமலாக்குவதற்கு துணை நிற்பது தற்காலிகமாக உள்ள அதிகாரத்தை குறிப்பாக, பாராளுமன்றத்தில் அரசியல் சாசனத்தில் உள்ளடக்கிய சட்டத்தையும், உள்ளூராட்சியிலும், மாகாணசபையிலும் இருக்கின்ற, செய்ய வேண்டிய அதிகாரத்தை இல்லாமலாக்கும் செயலாகவே நான் கருதுகின்றேன்.

துணைபோகக் கூடாது - துரைரெத்தினம்

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House