
posted 17th March 2022
கடந்த ஒரு மாதகாலமாக தங்கள் பணிகளை பகிஷ்கரித்து வந்த முன்பள்ளி ஆசிரியர்கள் அதிகாரிகளின் உத்தரவாதத்தை முன்னிட்டும் மாணவர்களின் நலன்நோக்கியும் செவ்வாய் கிழமை (15.03.2022) முதல் தங்கள் கடமைகளுக்கு திரும்பியுள்ளபோதும் இரு வாரங்களுக்குள் தீர்க்கமான முடிவு எட்டப்படாவிடில் மீண்டும் பணி பகிஷ்கரிப்பு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் சுமார் மூவாயிரம் ஆசிரியர்கள் கடந்த காலங்களில் ஒரு சில கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முன்வைத்து அவற்றிற்கான தீர்வு எட்டப்படாத நிலையில் கடந்த மாதம் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடத்து வந்ததுடன் கடந்த ஒரு மாதகாலமாக தங்கள் பணிகளையும் பகிஷ்கரித்து வந்த நிலையிலேயே செவ்வாய் கிழமை (15.03.2022) முதல் தங்கள் கடமைகளுக்கு திரும்பியுள்ளனர்.
இவர்களுக்கு அதிகாரிகள் சிலரினால் வழங்கப்பட்ட உத்தரவாதத்தைத் தொடர்ந்தே இவர்கள் தங்கள் கடமைகளுக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது இவ் ஆசிரியர்கள் கடமைகளுக்கு திரும்பியுள்ளபோதும் தற்பொழுது பாடசாலைகளுக்கு செல்ல இருக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களின் நலன் கருதியே இவர்கள் கடமைகளுக்கு திரும்பியுள்ளதாகவும், இரு வாரங்களுக்குள் தங்களுக்கு சரியான தீர்வு கிடைக்கப்பெறாவிட்டால், மீண்டும் இப் பணிப் பகிஷ்கரிப்பு தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 தொடக்கம் 25 வருடங்களுக்கு மேலாக தாங்கள் முன்பள்ளி ஆசிரியர்களாக சேவை நோக்கில் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும், அரச மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ரூபா 5000 கொடுப்பனவு தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் எனவும், எமது முன்பள்ளி ஆசிரியர்கள் பலர் பெண் தலைமைத்துவம் கொண்டவர்களாக இருப்பதனாலும், அத்துடன் மிகவும் வறுமைக்கோட்டிற்குள் வாழ்பவர்களாகையாலும், இன்றைய பொருளாதார சிக்கலில் தவிக்கும் தங்கள் குடும்பங்களின் நலன்நோக்கி தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House