திருக்குறளுக்கு பன்னாட்டுக் கவியரங்கம்

திருக்குறளுக்கு இதுவரை நடாத்தப்படாத முறையில் கவியரங்கமொன்று அண்மையில் உலக சாதனையாக மேற்கொள்ளப்பட்டது.

ஒவ்வொரு அதிகாரத்தின் பத்து குறள்களின் பொருளை விரிவாக மரபுக் கவிதை யொன்றில் 133 கவிஞர்கள் படைத்தனர். இக்கவியரங்கில் இலங்கை, டென்மார்க், நெதர்லாந்து, கனடா, இந்தியா பிரான்ஸ், பிரித்தானியா, ஜெர்மனி, மலேசியா, மற்றும் ஆர்ஜென்டீனா என ஏறத்தாழ 15 நாடுகளிலிருந்து கவிஞர்கள் தாங்கள் விரும்பும் அல்லது தனிப்பட்ட அதிகாரத்தை எடுத்துக் கொண்டு அதன் கருப்பொருளை மரபுக் கவிதைகளில் படைத்தனர்.

இந்தியாவிலிருந்து 84 கவிஞர்கள் கலந்து கொண்டதுடன், இலங்கையிலிருந்து 10 மரபுக் கவிஞர்கள் பங்கேற்றிருந்தனர். இவர்களில் மட்டக்களப்பைச் சேர்ந்த கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக சிரேஷ்ட விரிவுரையாளர் க. மோகனதாசன், ஆரையம்பதியைச் சேர்ந்த செம்மொழிப் புலவர் மூ. அருளம்பலம், கல்லடி உப்போடையைச் சேர்ந்த கவிஞர் வில்லூர்பாரதி க. முரளிதரன் மற்றும் அரசடித்தீவைச் சேர்ந்த கவிஞர் பகீரதன் ஆகியோர் கலந்து கொண்டு தமது ஆற்றலை வெளிக்கொணர்ந்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியை உலக சாதனையாக தமிழ்மகள் இலக்கிய அமைப்பு, மல்ரி சிமார்ட் சொலுஷன் அமைப்பு மற்றும் ஆல் இந்தியா புக் ஆஃப் ரொகாட்ஸ் ஆகியன இணைந்து நடாத்தியிருந்தன.

அத்தோடு நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களாக ஆற்காட்டினைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் திருமதி பானுரே காவும், கனடாவைச் சேர்ந்த கவிஞர் அகணி சுரேசும் செயற்பட்டிருந்தனர்.

திருக்குறளுக்கு பன்னாட்டுக் கவியரங்கம்

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House