திண்டாடும் ஓய்வூதியர்கள்

அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணிக்கொடைகளை உடனடியாக வழங்குமாறு ஓய்வூதியர்களின் உரிமைகளை காக்கும் தேசிய இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதனை வலியுறுத்தி மேற்படி அமைப்பின் செயலாளர் சரத் லால் பெரேராவினால் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜகத் டி. டயசுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதன் உப தலைவர் ஏ.எல். முகம்மட் முக்தார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

அரசாங்க சேவையில் 20 முதல் 30 வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய பலருக்கு வழங்கப்பட வேண்டிய 24 மாதங்களுக்கான ஓய்வூதிய தொகையை உள்ளடக்கிய ஓய்வூதிய பணிக்கொடை 2020 ஆம் ஆண்டுக்கு பின் ஓய்வுபெற்ற பலருக்கு இன்னும் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

இக்கொடுப்பனவை உரிய காலத்திற்கு அரசு வழங்காமையால் சிரேஷ்ட பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள வங்கிச் சலுகையை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது. இதன் காரணமாக ஓய்வூதியர்கள் பொருளாதார நெருக்கடிகளுக்கும் மன உழைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர். இது பெரும் அநீதியான செயற்பாடாகும்.

இவ் ஓய்வூதிய பணிக்கொடை கிடைக்கப் பெறாமையினால் தமது பிள்ளைகளின் திருமணம் போன்ற மங்கள காரியங்களை நடாத்தவோ இறுதிக் காலத்தில் தமக்கான வீடொன்றை அமைத்துக் கொள்ளவோ தமது அந்திம கால தேவைகளை பூர்த்தி செய்யவோ முடியாத கையறு நிலையில் குறித்த ஓய்வூதியர்கள் திண்டாடி வருகின்றனர்.

எனவே இனியும் தாமதிக்காமல் உடனடியாக இக்கொடுப்பனவை வழங்க வேண்டும். இல்லையேல் ஓய்வூதிய திணைக்களத்தின் முன்னால் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்றை ஓய்வூதியர்கள் நடாத்த நேரிடும் என அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

திண்டாடும் ஓய்வூதியர்கள்

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House