தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியில் மகளிர் தின விழா

இலங்கையின் வன்செயல் காரணமாக தென் இந்திய தமிழ் நாட்டுக்கு புலன்பெயர்ந்து அங்கு முகாம்களில் வசித்து வரும் இலங்கை தமிழர்கள் மத்தியில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நன்றி மையம் நிறுவன இயக்குனர் அருட்பணி ஜோசப் ஆபிரகாம் அடிகளார் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (13.03.2022) கஸ்தம்பாடி, மேல்மணவூர், ஓசூர், தவசி, கொண்டம் மற்றும் தேன்பள்ளி பகுதியில் வாழும் பெண்கள் கொண்ட குழுவினர் மத்தியில் இவ் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

18 பெண்கள் குழுக்களைச் சார்ந்த 301 மகளிர் இந் நிகழ்வுகளில் கலந்து கொண்டதுடன், இவர்களுக்கு மகளிர் தினத்தை முன்னிட்டு ஞாபகச் சின்னங்களும் வழங்கப்பட்டன.

இலங்கயைச் சேர்ந்தவரும் இந்தியாவில் புலம்பெயர்ந்து வாழும் ஓவியம் வரைவதில் வித்துவான் எம்.ஏ. நிமால் என்பவரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டார்.

தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியில் மகளிர் தின விழா

வாஸ் கூஞ்ஞ

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House