
posted 20th March 2022
சர்வகட்சி மாநாட்டால் தமிழ் மக்களுக்கு நன்மை எதுவும் கிடைக்கப்போவதில்லை. எனவே அந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பது குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கருத்து தொடர்பில் அவரிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சிப்பொறுப்பைக் கையிலெடுத்து இரண்டு ஆண்டுகளாகின்ற போதும் தமிழ் மக்களின் இனப்பிரச்னைக்கான தீர்வு தொடர்பில் கலந்துரையாடுவதற்கே தயக்கம் காண்பிக்கின்றார்கள். அதுமட்டுமன்றி நாட்டில் இனப்பிரச்னையே இல்லையென்று கூறியும் வருகின்றார்கள். இதனைவிடவும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களை தேடி போராட்டங்களைச் செய்து வருகின்ற நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் தருவதாக கூறி மக்களின் வேதனையுடன் விளையாடுகின்றார்கள்.
இதேபோன்று பயங்கரவாத தடைச் சட்டத்தைத் திருத்துவதாகக் கூறினாலும், நீண்டகாலத்துக்கு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாது தடுத்து வைத்தல் உள்ளிட்ட முக்கியமான விடயங்களை கைவிடுவதற்கு அவர்கள் தயாராக இல்லை. வெறுமனே கண்துடைப்புக்கான செயல்பாடாகவே பயங்கரவாத சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முயற்கின்றனர்.
இதேநேரம், இனப்படுகொலையையும், மனித உரிமைகள், மனிதாபிமான சட்ட மீறல்களையும் புரிந்துள்ள ராஜபக்ஷ அரசாங்கம் அவற்றுக்கான பொறுப்புக்கூறலைச் செய்வதற்கு தயாராக இல்லை. அண்மைய நாட்களில் அரசாங்கம் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அரசாங்கம்மீது அனைத்து இன மக்களும் வெறுப்பையே வெளிப்படுத்தியுள்ளனர்.
இத்தகைய தருணத்தில் நாம் மாநாட்டில் பங்கேற்பதானது வீழ்ச்சி கண்டிருக்கும் ராஜபக்ஷ குடும்பத்துக்கு மீண்டும் புத்துயிர் அளிப்பதற்கு நிகரானதாக மாறிவிடும். ஆகவே, இவ்விதமான பினனணிகளைக் கொண்டவர்கள் கூட்டும் சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதில் தமிழ் மக்களுக்கு எவ்வதமான நன்மைகளும் கிடைக்கப்போதில்லை என்றார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House