தமிழீழமா அல்லது இலங்கையுடன் சேர்ந்து வாழ்வதா?

கடற்றொழிலாளர் சம்மேளனப் பிரதிநிதிகள் இந்திய துணைத்தூதர் சந்திப்பு

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனப் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதர் ராகேஸ் நடராஜ் ஜெயபாஸ்கரனைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் செவ்வாய்க்கிழமை (22) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலின்போது இலங்கை எல்லைக்குள் இந்திய இழுவைமடிப் படகுகளின் வருகை மீளவும் அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக எழுவைதீவு, அனலைதீவு, நயினாதீவு, நெடுந்தீவு ஆகிய தீவகப் பகுதிகளில் இந்தியப் படகுகள் இலங்கை எல்லைக்குள் வருவதாகவும் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த சந்திப்புக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னராசா, தீவகப் பகுதிகளில் எல்லை தாண்டிய இந்திய இழுவைப் படகுகளின் வருகை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு இந்திய துணைத்தூதரிடம் கோரியதாக தெரிவித்தார்.

தமிழீழமா அல்லது இலங்கையுடன் சேர்ந்து வாழ்வதா?

தமிழ்நாட்டின் முதலமைச்சரும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு தூதுக்குழு அமைத்து, டில்லி சென்று குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் கட்சித் தலைவர்களைச் சந்தித்து தமிழீழமா அல்லது இலங்கையுடன் சேர்ந்து வாழ்வதா? என்ற தலைப்பில் இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாண மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று வலியுறுத்தவேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தமிழகத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக பயணத்தின்போது வைகோவை அவருடைய தாயகம் இல்லத்தில் சிவாஜிலிங்கம் சந்தித்துக் கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்புத் தொடர்பில் மறுமலர்ச்சி தி.மு.க தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கை பாராளுமன்றத்தில் இரண்டு முறை உறுப்பினர் பொறுப்பு வகித்த, தமிழ்த் தேசியக் கட்சி செயலாளர் நாயகம் சிவாஜலிங்கம் அவர்கள், 20.03.2022 தாயகத்தில், மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களைச் சந்தித்தார். பொன்னாடை அணிவித்தார்.

ஈழத்தமிழர்களுடைய பிரச்னைகளின் தொடக்க காலம் முதல் இன்று வரையிலும் எங்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்ற தலைவர் வைகோவுக்கு ஈழத் தமிழர்கள் சார்பில் இந்தப் பொன்னாடையை அணிவிக்கிறேன் என்று சொன்னார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சரும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு தூதுக்குழு அமைத்து, டில்லி சென்று குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் கட்சித் தலைவர்களைச் சந்தித்து தமிழீழமா அல்லது இலங்கையுடன் சேர்ந்து வாழ்வதா? என்ற தலைப்பில் இலங்கையின் வடக்கு - கிழக்கு மாநில மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று வலியுறுத்தவேண்டும்.

ஈழத்தமிழர் இனப்படுகொலைக் குற்றவாளிகளை, உலக நீதிமன்றத்தின் குற்றக்கூண்டில் நிறுத்த வேண்டும்; மீண்டும் ஒரு படுகொலைத் தாக்குதல் நடைபெறாத வண்ணம், இந்தியா பாதுகாப்பு ஏற்படுத்தித் தரவேண்டும்; அதற்கு, தலைவர் வைகோ அவர்கள் ஆவனசெய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இருவரும், ஈழத்தமிழர் பிரச்னை குறித்து, நீண்ட நேரம் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழமா அல்லது இலங்கையுடன் சேர்ந்து வாழ்வதா?

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House