தந்தை செல்வாவின் கனவை நனவாக்க வேண்டும் - சாள்ஸ் நிர்மலநாதன்
தந்தை செல்வாவின் கனவை நனவாக்க வேண்டும் - சாள்ஸ் நிர்மலநாதன்

சாள்ஸ் நிர்மலநாதன்

தந்தை செல்வா தூரநோக்குடன் சிந்தித்து தமிழர்களின் இருப்பு இலங்கையில் கேள்விக்குறியாக மாற்றம் அடைகின்றது என சிந்தித்தே தமிழரசுக் கட்சியை உருவாக்கி சமஷ்டிக்கான முன்னெடுப்பை மேற்கொண்டார். ஆனால் நாம் இன்னும் அந்த இலக்கை எட்டாத நிலையில் இருப்பதால் அனைவரும் ஒன்றித்து தந்தை செல்வாவின் கனவை நனவாக்க வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

தமிழர்களின் தந்தை செல்வா அவர்களின் 124வது பிறந்த தினத்தை முன்னிட்டு மன்னார் நகரில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு இன்று வியாழக்கிழமை (31.03.2022) காலை, மாலை அணிவித்தபின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இங்கு தெரிவிக்கையில்;

இலங்கையில் தமிழருக்கு சமத்துவம் வேண்டும் என்ற அடிப்படையில் தமிழருக்க எதிரான இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாகவும், இலங்கையில் தமிழர்களின் இருப்பு எதிர்காலத்தில் கேள்விக்குறியாக போகும் என்ற காரணத்தினாலும் சமஷ்டி முறையில் அரசியல் யாப்பு அமைய வேண்டும் என்ற நோக்கில் தந்தை செல்வா அவர்கள் இலங்கை தமிழரசுக் கட்சியை உருவாக்கி இருந்தார்.

அவர் அக் கட்சியை உருவாக்கி 70 வருடங்கள் கடந்தும். அந்த சமஷ்டி முறையான அரசியல் அமைப்பை இன்னும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் தமிழராகிய நாம் தொடர்ச்சியாக போராடி வருகின்றோம்.

தந்தை செல்வநாயகம் அவர்கள் ஜனநாயக வழியில் போரடியவர். அந்த வழியில் அவர் போராடியதுடன் இவர் மேற்கொண்ட ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டமையால் இவர் வட்டுக்கோட்டை தீர்மானம் ஊடாக தமிழீழ பிரகடனத்தை அவர் மேற்கொண்டார்.

அதன் அடிப்படையில் தமிழர்கள், இளைஞர்கள் குறிப்பாக இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராட ஆரம்பித்தனர். இருந்தும் இவ் ஆயுதப் போராட்டம் 2009 ஆம் ஆண்டு சர்வதேச நாடுகளின் உதவியுடன் மௌனிக்க வைக்கப்பட்டது.

அதன்பின், தமிழ் தேசிய அமைப்புக்களின் கூட்டு முயற்சியாக இந்த சமஷ்டி முறைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றபோதும், தற்பொழுதும் வடக்கு கிழக்கு பகுதிகளில் எமது நிலங்கள் பறிக்கப்படுகின்றது.

அத்துடன் தமிழர்களின் இந்து ஆலயங்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு, அவைகள் பௌத்த சமய இடமாக மாற்றம் பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடர்கின்றன.

அத்துடன் அனுராதபுரத்திலுள்ள கிராம அலுவலர்கள் பிரிவுகள் வவுனியா மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு வருகின்றது. இந்த புதிய ஆட்சி பதவிக்கு வந்தபின் எமது இனத்துக்கு எதிரான செயல்பாடுகள் மிகவும் மும்முறமாக இடம்பெற்று வருகின்றது.

ஏற்கனவே இவ்வாறு நடக்கும் என எதிர்பார்த்தே தந்தை செல்வா முன்னோடியான செயல்பாட்டில் இறங்கி தமிழரசுக் கட்சியை உருவாக்கியிருந்தார்.

இவ்வாறனவரான தந்தை செல்வாவின் 124வது பிறந்த நாளை நாம் இன்று (31.03.2022) நினைவு கூறுகின்றோம். இவ்வாறன தமிழர்களின் எதிர்கால சிந்தனையுடன் செயல்பாட்டை தமிழர்களாகிய நாம் யாவரும் ஒற்றுமையுடன் முன்னெடுக்க வேண்டியது தமிழர்களாகிய எமது ஒவ்வொருவரினதும் கடமையாகும் என தெரிவித்தார்.

தந்தை செல்வாவின் கனவை நனவாக்க வேண்டும் - சாள்ஸ் நிர்மலநாதன்

வாஸ் கூஞ்ஞ

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House