
posted 18th March 2022
இந்திய அரசின் நிதி உதவியுடன் யாழ் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் போரினால் அங்கங்களை இழந்த மற்றும் இதர காரணங்களால் அங்கங்களை இழந்த வறுமைப்பட்ட மக்களை கருத்தில் கொண்டு ஜெய்ப்பூர் செயற்கை கால் பொருத்தும் முகாம் மார்ச் 13ம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 30ம் திகதி வரை யாழ் மாவட்ட முகாமைத்துவ திறன் அபிவிருத்தி நிலையத்தில் நடைபெற்றுவருகிறது.
இதனூடாக முழங்காலிற்கு கீழ் செயற்கை கால் பொருத்துதல், இடுப்புக்கு கீழ் செயற்கைக் கால் பொருத்துதல் மற்றும் முழங்கை பகுதியிலிருந்து அதாவது முழங்கை ட பகுதி உள்ளவர்களுக்கு செயற்கை கை பொருத்துதல் ஆகிய சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றது.
குறித்த மருத்துவ முகாமில் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து குறித்த தேவைப்பாடுகள் உடையோரை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக இவ் அரிய சந்தர்ப்பத்தை தவறவிடாது பங்குபற்ற விரும்பும் பயனாளிகள் தமது பதிவுகளை எதிர்வரும் 24.03.2022ம் திகதி வியாழக்கிழமைக்கு முன்னர் தத்தமது பிரதேச செயலகங்கள் ஊடாக பதிவுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் க. விமலநாதன் அவர்கள் அறியத்தந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலக ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House