சிவராத்திரி நிகழ்வை நடத்த முடியாமல் தடுக்கும் தொல்பொருட்திணைக்களம்

இம்முறையும் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி நிகழ்வை நடத்த முடியாமை கவலை அழிப்பதாக ஆலயத்தின் பூசகர் தம்பிராசா மதிமுகராசா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் தொல்பொருட்திணைக்களத்துக்கு கீழ் உள்ளதாக தெரிவித்து, அந்த திணைக்களம் மற்றும் பொலிஸாரால் வவுனியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் பல்வேறு தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த தடைகளால் கடந்த வருடத்தை போலவே இம்முறையும் சிவராத்தி நிகழ்வை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை காலை முதல் குறித்த ஆலய வளாகப் பகுதியில் இராணுவத்தினர், பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் பொதுமக்கள் சிலர் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு வருடமும் சிறப்பான முறையில் மகா சிவராத்திரி நிகழ்வை நாம் அனுஷ்டித்து வந்தோம். எனினும் கடந்த இரு வருடங்களாக அந்த பாக்கியம் எமக்கு கிடைக்கவில்லை.

இந்து சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவனின் முக்கிய விரதத்தை கூட அனுஷ்டிக்க முடியாத அவல நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது. எமது வழிபடுவதற்கான சுதந்திரம் தடுக்கப்பட்டுள்ளது.

எனவே எமது ஆலயத்துக்கு சென்று பூசை வழிபாடுகளில் ஈடுபடுவதுடன் எமது மத சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு உரிய தரப்புக்கள் அனுமதியை வழங்கவேண்டும் என்றார்.

சிவராத்திரி நிகழ்வை நடத்த முடியாமல் தடுக்கும் தொல்பொருட்திணைக்களம்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House