
posted 14th March 2022

முஹம்மட் ரீஹான் முஹம்மட் யூசுப்
2021ஆம் ஆண்டுக்கான தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தைச் சேர்ந்த 58 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் முஹம்மட் ரீஹான் முஹம்மட் யூசுப் எனும் மாணவன் 191 அதிகூடிய புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
திங்கட்கிழமை (14) இம்மாணவன், அதிபர் யூ.எல். நஸார் தலைமையில் பாடசாலை நிர்வாகத்தினரால் வரவேற்கப்பட்டு பாராட்டப்பட்டார்.
அத்துடன் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் இப் பாடசாலைக்கு நேரடியாக விஜயம் செய்து இம்மாணவனைப் பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் கல்முனை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் என்.எம். மலிக், பாடசாலையின் பிரதி அதிபர் றிப்கா அன்ஸார், உதவி அதிபர்களான எம்.எச். நுஸ்ரத் பேகம், ஐனுல் மர்சுனா, வலய அதிபர் எஸ். முஸம்மில், பகுதித் தலைவர் ஷியானா நௌசாத் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
இம்மாணவன் கல்முனையைச் சேர்ந்த மகப்பேற்று வைத்திய நிபுணர் முஹம்மட் ரீஹான் தம்பதியரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
2021ஆம் ஆண்டுக்கான தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சையில், அம்பாறை மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளி 147 என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House