
posted 3rd March 2022
கிழக்கிலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் பெருமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக்கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பெரு மழையுடன் கூடிய தொடர்சசியான சீரற்ற காலநிலை தொடர்ந்த வண்ணமுள்ளது.
அதிலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தினமும் அதிக மழை வீழ்ச்சி காணப்படுவதால் தாழந்த பிரதேசங்களில் மழை நீர் தேங்கிய வெள்ளப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கால நிலை சீரின்மையால் இந்த மாவட்டங்களில் கடல் சீற்றமும், கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கடற்றொழில் முற்றாகப் பாதிக்கப்பட்டுளள்ள அதே வேளை,
கரைவலை மீன்பிடி நிறுத்தப்பட்டு கடற்றொழிலாளர்கள் நாளாந்த வருமானம் பெற முடியாதவாறு வீடுகளில் மீனவர்கள் முடங்கிக்கிடக்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது.
இதே வேளை அம்பாறை மாவட்டத்தின் சில முக்கிய விவசாயப் பிரிவுகளில் துரிதமாக இடம்பெற்று வந்த பெரும்போக நெல் அறுவடை வேலைகள் பெருமழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
நெல் வயற்காணிகளில் மழை நீர் தேங்கி காணப்படுவதால், அறுவடை இயந்திரங்கள் மூலம் இடம்பெற்று வந்த அறுவடையும் ஸ்தம்பிதமாகி விவசாயிகளைப் பெரிதும் பாதித்துள்ளது.
மேலும் அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர், மல்கம்பிட்டி, குடுவில் போன்ற பிரதேசங்களில் சிறுகைத்தொழிலாக இடம்பெற்று வந்த செங்கல் உற்பத்தியும் மழையால் பாதிக்கப்பட்டு,
இதில் ஈடுபட்ட அன்றாட கூலித்தொழிலாளர்களும் நாhளாந்த வருமானமிழந்து நிர்க்கதிநிலைக்குத்தள்ளப்பட்டுளள்னர்.
கட்டிடங்களின் நிர்மான வேலைகளுக்கு முக்கிய மூலப் பொருளாகக் கொள்ளப்படும் செங்கல் உற்பத்தியும் இதனால் பாதிக்கப்பட்டு உற்பத்தியாளர்களும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
எதிர்வரும் சில தினங்களில் மழையுடன் கூடிய காலநிலை சீரடையலாமென வழிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House