கவனிக்கவும்!! பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்கு

கவனிக்கவும்!!

பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்கு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு பல்கலைக்கழக சுற்றுப்புறப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் முகமாக விசேட போக்குவரத்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இன்று வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை மூன்று தினங்களிலும் காலை 8 மணி முதல் மாலை 3 மணிவரை திருநெல்வேலிச் சந்தியில் இருந்து கொக்குவில் சந்தி நோக்கிய ஆடியபாதம் வீதியூடான பயணம் கொக்குவில் புகையிரதக் கடவை வரை ஒருவழிப் பாதையாக மாற்றப்படுகிறது.

கொக்குவில் சந்தியில் இருந்து திருநெல்வேலிசந்தி வரை பயணிப்போர் பிறவுண் வீதி மற்றும் இராமநாதன் வீதியூடாக பலாலி வீதியை சென்றடைய மாற்றுப் பாதையைப் பயன்படுத்துவதுடன் பலாலி வீதி பரமேஸ்வரா சந்தியிலிருந்து கலட்டி சந்தி வரையான போக்குவரத்தும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகின்றது என நல்லூர் பிரதேச சபை அறிவித்துள்ளது.



அதிகரிக்கும் விபத்துகள்

திருநெல்வேலி பரமேஸ்வராச் சந்தியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.

பலாலி வீதி, பரமேஸ்வரா சந்தியில் புதன்கிழமை அதிகாலை 12 மணியளவில் மோட்டார் சைக்கிளை திருநெல்வேலிப் பகுதியில் இருந்து வந்த வாகனம் மோதித் தள்ளியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்த அதேநேரம் மேலும் ஒருவர் படுகாயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

வாகனத்தில் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் விசாரணையை மேற்கொண்டுவரும் கோப்பாய் பொலிஸார் விபத்துடன் தொடர்புபட்ட வாகனங்களை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

கவனிக்கவும்!! பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்கு

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House